• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்திய U19 கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மாரடைப்பால் திடீர் மரணம்

இந்திய U19 கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மாரடைப்பால் திடீர் மரணம்

ஏவி பரோட்

ஏவி பரோட்

ரஞ்சி கோப்பையை வென்ற சவுராஷ்டிரா அணியின் ஒரு பகுதியாக பரோட் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

  • Share this:
    இந்திய U19 கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஏவி பரோட் மாரடைப்பால் காலமானார். விக்கெட் கீப்பிங், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மூன்றையும் செய்யக்கூடிய ஒரு அரிய கிரிக்கெட் வீரர்.

    ஏவி பரோட் அக்டோபர் 15-ம் தேதி மாரடைப்பு காரணமாக இறந்தார் என்று சௌராஷ்டிரா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 29 வயதான ஏவி பாரட் சௌராஷ்டிராவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களின் ஒருவர். இவர் மரணமடைந்த செய்தி ரசிகர்கள் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    ஏவி பரோட் கீப்பிங், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என்ற மூன்றிலும் ஜொலிக்கும் வீரர். வலது கை பேட்ஸ்மேனான அவர் சுழற்பந்து வீசக்கூடியவர். 2011-ல் இந்திய ஜூனியர் அணியின் கேப்டனாக இருந்தவர். 38 முதல்தர போட்டிகள், 38 ஏ பிரிவு போட்டிகள் மற்றும் 20 உள்நாட்டு டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.ரஞ்சி கோப்பையை வென்ற சவுராஷ்டிரா அணியின் ஒரு பகுதியாக பரோட் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.



    ஏவி பரோட் முதல் தர போட்டிகளில் 1547 ரன்கள், ஏ பிரிவு ஆட்டங்களில் 1030 மற்றும் டி20 போட்களில் 717 ரன்கள் எடுத்துள்ளார். சௌரஷ்டிராவிற்காக அவர் 21 ரஞ்சி கோப்பை போட்டிகள், 17 ஏ பிரிவி போட்டிகள் ம்ற்றும் 11 உள்நாட்டு டி20 போட்டிகளில் விளையாடினார்.இ ந்த ஆண்டின் தொடக்கத்தில், கோவாவுக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டியின் போது அவர் வெறும் 53 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து அசத்தினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: