அமெரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனான முன்னாள் இந்திய வீரர்!

Web Desk | news18
Updated: November 4, 2018, 4:29 PM IST
அமெரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனான முன்னாள் இந்திய வீரர்!
சவுரப் நெட்ரவால்கர் (கோப்புப்படம்)
Web Desk | news18
Updated: November 4, 2018, 4:29 PM IST
19 வயதுக்கு உள்பட இந்திய அணியில் 2010-ம் ஆண்டு விளையாடிய சவுரப் நெட்ரவால்கர், அமெரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வாகியுள்ளார்.

2010-ம் ஆண்டு நடந்த 19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடியவர் சவுரப் நெட்ரவால்கர். உலகக்கோப்பையில் சிறப்பாக அவர் விளையாடியிருந்தார். தொடர் முடிந்த பின்னர், மும்பை அணிக்காக ஒரே ஒரு போட்டியில் விளையாடினார். பின்னர், அமெரிக்காவுக்கு படிக்கச் சென்று அங்கேயே செட்டில் ஆகி விட்டார்.

கிரிக்கெட் மீதான தாகம் குறையாத சவுரப் வார விடுமுறைகளில் தான் வேலை பார்த்து வந்த சான் பிரான்சிஸ்கோவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வந்து கிரிகெட் விளையாடுவார். அவரது திறமையை கண்டுகொண்ட அமெரிக்க கிரிக்கெட் சங்கம், அந்நாட்டு அணிக்கு சவுரப்பை கேப்டனாக நியமித்துள்ளது.

வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியான அமெரிக்கா, 2023-ம் ஆண்டு நடக்க உள்ள உலகக்கோப்பைக்கு தகுதி பெறுவதற்காக லீக் போட்டிகளில் விளையாட வேண்டும். இந்த லீக் போட்டிகளில் வெற்றி பெற்றும் உலகக்கோப்பைக்குள் நுழைவதே சவுரப்பின் மிகப்பெரிய கடமையாக இருக்கும்.

மேலும் செய்திகள்..

சாதனைக்கு தேவை 1 ரன் - கோலியை விமர்சித்த தோனி ரசிகர்கள்!

குறுகிய ஆட்டங்களில் இனி கவனம் - ராயுடு எடுத்த அதிரடி முடிவுAlso See..

First published: November 4, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்