• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டி20 உலகக் கோப்பை : இந்திய அணி ஆலோசகராக எம்.எஸ்.தோனி நியமனம்

டி20 உலகக் கோப்பை : இந்திய அணி ஆலோசகராக எம்.எஸ்.தோனி நியமனம்

மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி

டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
    டி20 உலகக் கோப்பை தொடர் யுஏஇ மற்றும் ஓமானில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர்கள் ரவிசந்திரன் அஸ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்திக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் இடம்பெறவில்லை்.



    இந்திய அணி : விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹர், ரவிசந்திரன் அஸ்வின், அக்ஷர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி

    மாற்று வீரர்கள் : ஷ்ரேயாஸ் ஐயர், சர்துல் தாகூர், தீபக் சஹார்



    மேலும் யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்றது. அதன்பின் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லவில்லை. மகேந்திர சிங் தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டது இந்திய அணிக்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: