இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதின் பயணித்த கார் விபத்தில் சிக்கியது

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதின் பயணித்த கார் விபத்தில் சிக்கியது

விபத்தில் சிக்கிய கார்

அசாரூதின் தனது குடும்பத்தினருடன் பயணித்த போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

 • Share this:
  இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான முகமது அசாரூதின் பயணித்த கார் விபத்தில் சிக்கியது.

  ராஜஸ்தான் மாநிலம் சூர்வால் என்ற பகுதியில் அசாரூதின் பயணித்த கார் விபத்தில் சிக்கிகயது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக அசாரூதின் எந்த காயமின்றி தப்பி உள்ளார்.

  அசாரூதின் தனது குடும்பத்தினருடன் பயணித்த போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் கார் கடுமையாக சேதமடைந்துள்ளது. ஆனால் மற்ற யாருக்கும் இந்த விபத்தில் பெரிதாக எந்த காயமும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.  இந்திய அணிக்காக அசாரூதின் 99 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 334 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐசிசி உலக் கோப்பை 1992, 1996 மற்றும் 1999 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக அசாரூதின் இருந்துள்ளார். 1996-ம் வருடம் அசாரூதின் தலைமையிலான இந்திய அணி அரையிறுதி வரை முன்னேறியது குறிப்பிடதக்கது.
  Published by:Vijay R
  First published: