மீண்டும் யுவராஜ் சிங்: ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் ஆட ஒப்பந்தம்

யுவ்ராஜ் சிங்.

ஆஸ்திரேலியாவில் உள்ள கிளப் ஒன்று யுவராஜ் சிங்கை கிரிக்கெட் ஆட ஒப்பந்தம் செய்யவுள்ளது. யுவராஜ் விரைவில் இந்த கிளப்புக்கு ஆட கையெழுத்திடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 • Share this:
  ஆஸ்திரேலியாவில் உள்ள கிளப் ஒன்று யுவராஜ் சிங்கை கிரிக்கெட் ஆட ஒப்பந்தம் செய்யவுள்ளது. யுவராஜ் விரைவில் இந்த கிளப்புக்கு ஆட கையெழுத்திடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  இவர் அநேகமாக கிறிஸ் கெய்ல், ஏ.பி.டிவில்லியர்ஸ், பிரையன் லாரா ஆகியோருடன் இணையவிருக்கிறார். ஜூன் 2019-ல் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
  இந்த ஆண்டு இறுதியில் யுவராஜ் சிங் மல்கிரேவ் கிரிக்கெட் கிளப்புக்காக ஆஸ்திரேலியாவில் முழு நேர கிரிக்கெட்டுக்குத் திரும்புகிறார். டி20 போட்டிகளுக்காக யுவராஜ் சிங் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார்.

  ஏற்கெனவே இலங்கி அதிரடி வீரர் திலகரத்ன தில்ஷான், உபுல் தரங்கா ஆகியோர் ஒப்பந்தம் செய்து கொண்டு விட்டனர்.
  முன்னதாக யுவராஜ் சிங் பஞ்சாப் கிரிக்கெட் கிளப்புடன் இணையப் போவதாக செய்திகள் எழுந்தன, ஆனால் இவர் வெளிநாட்டு லீகுகளில் ஆட கையெழுத்திட்டதால் இவரை இங்கு ஆட பிசிசிஐ அனுமதிக்கவில்லை.

  டிவிலியர்ஸ், லாரா ஆகியோரும் இப்போது யுவராஜ் சிங்குடன் இந்த கிளப்பில் ஆடவிருக்கின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  2019-ல் ஓய்வு பெற்ற யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டை துறந்த பிறகு சிலபல தொடர்களில் ஆடினார். குளோபல் டி20 கனடாவில் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டார், பிறகு டி10 லீகில் ஆடினார்.
  மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 லீகான பிக்பாஷிலும் ஆட பேச்சு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது, ஆனால் இதுவரை அது யுவராஜுக்கு தகையவில்லை. பிக்பாஷ் லீகில் ஒரு இந்திய வீரர் கூட இதுவரை ஆடியதில்லை.

  2021-ல் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜண்ட்ஸ் அணியில் ரோட் சேஃப்டி தொடரில் ஆடினார். அயல்நாட்டு லீகுகளில் ஆடினால் ஐபிஎல் தொடரிலும் ஆட முடியாது.
  இந்நிலையில் பிசிசிஐ-யின் கறார் விதிமுறைகள் இவரை இந்திய கிரிக்கெட்டிலிருந்து புறந்தள்ளினாலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் கிளப் ஒன்று இவரை மீண்டும் ஆட வைக்க முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: