கோவாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரும், முன்னாள் சி.எஸ்.கே அணியின் சுழற்பந்து வீச்சாளாருமான சதாப் ஜகதி அனைத்து விதமான போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவத்துள்ளார்.
இடதுகை சுழற்பந்து வீச்சாளரான சதாப் ஜகதி ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் லயன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்தள்ளார்.
சதாப் ஜகதி தனது ட்விட்டரில், “அனைத்துவிதமான போட்டிகளிலிருந்து நான் ஓய்வு பெறுகிறேன். கடந்த ஒரு வருடத்தில் நான் அதிகம் விளையாடவில்லை என்றாலும் என் வாழ்வில் கடினமான முடிவு இது. பிசிசிஐ மற்றும் கோவா கிரிக்கெட் சங்கத்திற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்“ என்றார்.
சதாப் ஜகதி 1998ம் ஆண்டு முதல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். 92 போட்டிகளில் உள்ளூர் விளையாடி உள்ள ஜகதி 275 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். ஆனால் இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை.
சதாப் ஜகதி ஓய்வு அறிவிப்பை அடுத்து, அவருக்கு நன்றி தெரிவித்து சி.எஸ்.கே ட்வீட் செய்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.