தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் பவுலர் யோ மகேஷ் ஓய்வு: 33 வயதிலேயே திடீர் முடிவு

தமிழக, சிஎஸ்கே முன்னாள் வீரர் யோ மகேஷ்

தமிழக அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் யோ மகேஷ் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழக அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் யோ மகேஷ் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

  33 வயதேயான விஜயகுமார் யோ மகேஷ் வலதுகை வேகப்பந்து வீச்சாளர் என்பதோடு பேட்டிங்கிலும் வல்லவர் என்பதால் அவர் ஆல்ரவுண்டர் என்றே பங்காற்றினார். முதல் தர கிரிக்கெட்டில் இவரது அதிகபட்ச ரன் 103 நாட் அவுட் ஆகும். 2 சதங்கள் 5 அரைசதங்களுடன் மொத்தம் 50 போட்டிகளில் 1,119 ரன்களை இவர் முதல்தர கிரிக்கெட்டில் எடுத்துள்ளார்.

  பந்து வீச்சில் முதல் தர கிரிக்கெட்டில் 50 போட்டிகளில் 108 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார், அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 47 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 93 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

  இந்தியா யு-19 அணிக்காக புஜாரா, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் இலங்கையில் 2006-ல் நடந்த உலகக்கோப்பை யு-19 தொடரில் ஆடினார் யோ மகேஷ்.
  16 வ்
  இந்நிலையில் ஓய்வு பெறுவதாக அறிவித்த யோ மகேஷ் அறிக்கையில், “டெல்லி டேர் டெவில்ஸ் மற்றும் சிஎஸ்கே அணி எனக்கு வாய்ப்பளித்து பெரிய லெஜண்ட்களுடன் ஓய்வறையை பகிர்ந்து கொள்ள அதிர்ஷ்டம் வாய்க்கச் செய்ததற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 5 ஆண்டு காலம் காயங்களால் அவதியுற்றேன், ஆனால் எனக்கு ஆதரவளித்த இந்தியா சிமெண்ட்ஸுக்கும் என் நன்றியி உரித்தாக்குகிறேன்.

  என்னை 14 வயதிலிருந்து வளர்த்தெடுத்து 12 ஆண்டுகால முதல் தர கிரிக்கெட் வாய்ப்பளித்த தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி. பிசிசிஐக்கும் நன்றியைப் பதிவு செய்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

  2008 ஐபிஎல் தொடரில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் அதிகபட்ச விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர் யோ மகேஷ், அந்த சீசனில் இவர் 16 விக்கெட்டுகளை 8.77 என்ற சிக்கன விகிதத்தில் எடுத்துள்ளார்.
  Published by:Muthukumar
  First published: