இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி இங்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் அபாரமாக விளையாடிய இந்திய அணி இந்தூரில் நடந்த மூன்றாவது டெஸ்டில் சொதப்பியது. ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் களமிறங்கிய ஆஸ்திரேலியா இந்தூர் டெஸ்டில் வெற்றிப்பெற்றது.
இந்தப்போட்டியில் இந்திய அணியின் செயல்பாடுகள், ஆடுகளம் போன்றவை விமர்சனத்துக்குள்ளானது. இதுதொடர்பாக பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், “இந்த பிட்ச்-ல நல்லவேளையா கே.எல்.ராகுல் விளையாடல. ராகுல் இந்த டெஸ்டில் விளையாடி 2 மேட்ச்-லயும் ரன் எடுக்காம போயிருந்தா அவ்ளோதான் இதோட ராகுல் கேரியரை சமாதி பண்ணியிருப்பாங்க.
இந்த விக்கெட்ல பேட்டிங் ஆடுறது ரொம்ப கஷ்டம். யாராக இருந்தாலும் விளையாடுறது கஷ்டம். பால் பயங்கரமாக ஸ்விங் ஆகுது. இந்த விக்கெட்-ல நான் பவுலிங் போட்டிருந்தா கூட விக்கெட் எடுத்திருப்பேன். இந்த மாதிரி டெஸ்ட் மேட்ச் பார்கவே கஷ்டமா இருக்கு. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இது ஒரு நல்ல விளம்பரமே இல்லை. இதே இந்திய அணி, இங்கிலாந்து,ஆஸ்திரேலியால போய் சிறப்பாக விளையாடி இருக்காங்க. இங்கே ஏன் பயப்படுறாங்கன்னு தெரியல.
டெஸ்ட் மேட்ச்-ல ஒரு உற்சாகத்தை கொண்டு வரலாம். எதுக்கு எடுத்தாலும் ரிவ்யூ எடுக்க வேண்டியது. அந்த ரிவ்யூ காலியாகிறது. இந்த டெஸ்ட்-ல முக்கியமானது ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்சி. களத்துல எதையாவது செய்யனும் துடிப்போடு ஸ்மித் இருந்தார். ஸ்மித்-க்கு எப்படி இந்த போட்டியில ஃபைட் பண்ணனும்னு தெரியும்” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cheteshwar Pujara, Cricket, Kl rahul, Steve Smith, Virat Kohli