இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேதன் சவுகானுக்கு கொரோனா பாதிப்பு

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேதன் சவுகானுக்கு கொரோனா பாதிப்பு

சேதன் சவுகான்

72 வயதான முன்னாள் கிரிக்கெட் வீரர் சேதன் சவுகானுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

 • Share this:
  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வெற்றிகரமான தொடக்க வீரருமான சேதன் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  சேதன் சவுகான் இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 1970-ல் சுனில் கவாஸ்கருடன் வெற்றிகரமான தொடக்க வீரராக விளையாடியவர் சேதன் சவுகன். இவர்கள் இருவரும் சிறந்த தொடக்க வீரர்களாக அப்போது இருந்து வந்தனர்.

  கிரிக்கெட் வரலாற்றில் சதம் விளாசமால் 2000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமை பெற்றவர். உள்ளூர் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் சேதன் சவுகான்.

  டெஸ்ட் போட்டியில் 68 இன்னிங்ஸ் விளையாடி உள்ள சேதன் சவுகான் 2084 ரன்கள் எடுத்துள்ளார். இவர் 7 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

  சேதன் சவுகான் 1990-ல் மக்களவை அமைச்சராக இருந்தார். தற்போது உத்திரபிரதேச மாநில அமைச்சர் பொறுப்பில் உள்ளார். கொரோனா உறுதி செய்யப்பட்ட சேதன் சவுகனா் லக்னோவாவில் உள்ள பி.ஜி.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  சேதன் சவுகான் விரைவில் குணமடைய வேண்டுமென்று கிரிக்கெட் பிரபலங்கள் பலர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளனர்.
  Published by:Vijay R
  First published: