இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் மருத்துவ வல்லுனர்கள் இடம்பெற வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில மாதங்களாக இந்திய அணியின் முக்கிய வீரர்கள் காயம் அடைந்து வரும் நிலையில் கவாஸ்கர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மிட் டே இதழுக்கு கவாஸ்கர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது-
பேட்ஸ்மேன், வேகப்பந்து வீச்சாளர், ஸ்பின் பவுலர்கள், விக்கெட் கீப்பர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஃபிட்னஸ் இருப்பதில்லை. அதற்கான தேவையும் கிடையாது. இதன் அடிப்படையில் யோ-யோ உடல் தகுதி தேர்வு பயன் அளிக்காது. இதேபோன்று ஃபிட்னஸ் என்பது ஒவ்வொரு வீரருக்கும் வித்தியாசமாக அமையும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஃபிட்னஸை நாம் எதிர்பார்க்க முடியாது.
எல்லோருக்கும் ஒரே சைஸ் கொண்ட சட்டை பொருந்துமா? அதுபோலத்தான் ஒரே மாதிரியான உடல் தகுதி தேர்வு அனைவருக்கும் பொருந்தாது. இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் மருத்துவ வல்லுனர்கள் இடம்பெறுவது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தாண்டு இறுதியில் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்காக 20 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை பிசிசிஐ உருவாக்கியுள்ளது.
முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரின்போது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இந்திய வீரர் பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் 3 மாதங்கள் ஓய்வில் இருந்தார்.
காயத்திலிருந்து மீண்டாலும் இலங்கை தொடரிலிருந்து பும்ரா நீக்கம்… காரணம் இதுதானாம்…
இதேபோன்று ரோகித் சர்மாவுக்கு வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது கை விரலில் காயம் ஏற்பட்டு, ஒரு மாதத்திற்கும் மேலாக ஓய்வில் இருந்தார்.
‘ஸ்ரீநாத்திற்கு பின்னர் இவர்தான்’ – இளம் வேகப்பந்து வீச்சாளரை பாராட்டும் அஜய் ஜடேஜா
உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் முக்கிய வீரர்கள் காயம் ஏற்படாமல் தொடரில் பங்கேற்க வேண்டும். இந்நிலையில் கவாஸ்கர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Indian cricket team