ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிர் இழந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் அந்த அணிக்காக சைமண்ட்ஸ் விளையாடியுள்ளார். கடந்த 1998ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச போட்டியில் அறிமுகமான சைமண்ட்ஸ் பேட்ஸ்மேன் ஆகவும், பந்துவீச்சாளராகவும் குறிப்பிடதக்க பங்களிப்பை ஆஸ்திரேலிய அணிக்கு வழங்கியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியுள்ளார். இந்நிலையில், நேற்று குயின்ஸ்லாண்ட்(Queensland) பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதில், 46 வயதான சைமண்ட்ஸ் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ஜடேஜாவுக்கு மாற்று வீரர் கிடையாது - தோனி கூறியதால் ரசிகர்கள் மகிழ்ச்சி
ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சைமண்ட்ஸ் ஒருநாள் போட்டிகளில் மிகப்பெரிய ஹிட்டர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். கடந்த 2007-2008ம் ஆண்டு இந்திய ஆணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்று விளையாடியது. அப்போது, இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தன்னை குரங்கு என விமர்சித்ததாக சைமண்ட்ஸ் குற்றம் சாட்டியது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.