Home /News /sports /

மைக்கேல் ஸ்லேட்டருக்கு ஜெயில் தண்டனை இல்லை; மனநலக் காப்பகத்திற்கு அனுப்ப நீதிபதி அதிரடி உத்தரவு

மைக்கேல் ஸ்லேட்டருக்கு ஜெயில் தண்டனை இல்லை; மனநலக் காப்பகத்திற்கு அனுப்ப நீதிபதி அதிரடி உத்தரவு

மைக்கேல் ஸ்லேட்டர்

மைக்கேல் ஸ்லேட்டர்

ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் மைக்கேல் ஸ்லேட்டர், மனநலம் காரணமாக அவர் மீதான குடும்ப வன்முறை குற்றச்சாட்டை சிட்னி நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, புதன் கிழமை சிறைத் தண்டனையிலிருந்து தப்பினார் என்று ஆஸ்திரேலிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் மைக்கேல் ஸ்லேட்டர், மனநலம் காரணமாக அவர் மீதான குடும்ப வன்முறை குற்றச்சாட்டை சிட்னி நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, புதன் கிழமை சிறைத் தண்டனையிலிருந்து தப்பினார் என்று ஆஸ்திரேலிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

    52 வயதாகும் மைக்கேல் ஸ்லேட்டர்,அக்டோபர் மாதம் குடும்ப வன்முறை குற்றச்சாட்டைத் தொடர்ந்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது முன்னாள் மனைவியை துன்புறுத்தி மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

    ஒரு காலத்தில் பிரபல கிரிக்கெட் வீரரும் தற்போது வர்ணனையாளருமான ஸ்லேட்டர் தனது முன்னாள் மனைவிக்கு தடை உத்தரவை மீறி ஏகப்ப்பட்ட குறுஞ்செய்திகள் மற்றும் அழைப்புகளை அனுப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்டார்.

    இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த வேவர்லி உள்ளூர் நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட் ரோஸ் ஹட்சன் புதன்கிழமை ஸ்லேட்டருக்கு சிறைத்தண்டனை விதிக்க மறுத்துவிட்டார், ஆனால் அவர் மூன்று வாரங்கள் மனநலப் பிரிவில் இருக்குமாறு உத்தரவிட்டார் என்று ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகம் (ஏபிசி) தெரிவித்துள்ளது.

    "பிப்ரவரி முதல், ஸ்லேட்டர் மருத்துவ சிகிச்சையில் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளார் அவரது மன ஆரோக்கியத்தின் உச்சத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும்" என்று ஹட்சன் நீதிமன்றத்தில் கூறியதாக ஏபிசி கூறுகிறது.

    "அவர் சிகிச்சை மற்றும் ஆலோசனைக்கு உறுதியான அர்ப்பணிப்பைக் காட்டியுள்ளார்." என்று நீதிபதி அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.

    செவ்வாயன்று காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, சிட்னி மருத்துவமனையில் சிகிச்சைக்காக மனநலப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதால், ஸ்லேட்டர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

    ஸ்லேட்டர் ஏற்கனவே ஐந்து தனித்தனி மனநல மருத்துவர்களைப் பார்த்துள்ளார் மற்றும் 100 நாட்களுக்கும் மேலாக பல்வேறு மனநல சுகாதார நிலையங்களில் தங்கி சிகிச்சை பெற்றதாக ஏபிசி தெரிவித்துள்ளது.

    முன்னாள் தொடக்க பேட்டர் ஸ்லேட்டர் 1993-2001 வரை 74 டெஸ்ட் மற்றும் 42 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார், ஆனால் கடந்த ஆண்டு செவன் நெட்வொர்க்கிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Australia, Cricket

    அடுத்த செய்தி