• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது

மைக்கேல் ஸ்லேட்டர்.

மைக்கேல் ஸ்லேட்டர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் நியூசவுத்வேல்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

  • Share this:
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் நியூசவுத்வேல்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    கடந்த வாரம் நடந்த குடும்ப வன்முறைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டதாகக் கூறும் போலீஸ் மேல் விவரங்கள் எதையும் அளிக்கவில்லை என்பதோடு இன்னும் மைக்கேல் ஸ்லேட்டர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யவில்லை.

    மைக்கேல் ஸ்லேட்டரின் மேனேஜர் சான் ஆண்டர்சன் இது குறித்து கருத்து கூற மறுத்து விட்டார். டொமஸ்டிக் வயலன்ஸ் தொடர்பாக நியூசவுத் வேல்ஸ் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. “விசாரணைகளுக்குப் பிறகு போலீசார் மேன்லியில் உள்ள மைக்கேல் ஸ்லேட்டரிடம் பேசினர். அதன் பிறகே அவர் கைது செய்யப்பட்டு மேன்லி காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்” என்று நியூசவுத் வேல்ஸ் போலீஸ் கூறியுள்ளது.

    ஓபனிங் பேட்ஸ்மெனான மைக்கேல் ஸ்லேட்டர் 1993-2001 வரை ஆஸ்திரேலியாவுக்காக 74 டெஸ்ட் போட்டிகளில் ஆடினார். 42 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். அதன் பிறகு 15 ஆண்டுகளாக அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் டிவி திரைகளில் வர்ணனையாளராக இருந்து வருகிறார். செவன் நெட்வொர்க் வர்ணனைக் குழுவிலிருந்து ஸ்லேட்டர் சமீபத்தில் நீக்கப்பட்டார்.

    51 வயதாகும் மைக்கேல் ஸ்லேட்டர் சமீபத்தில் கடும் சர்ச்சையில் சிக்கினார். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கு எதிராகவே இவர் சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறி கடும் சர்ச்சைகளில் சிக்கினார். கோவிட் 19 2ம் அலையின் போது இந்தியாவில் சிக்கியிருந்த ஆஸ்திரேலிய வீரர்களை ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பக் கூடாது என்று கூறினார் பிரதமர் ஸ்காட் மாரிசன்.

    இதனை எதிர்த்து மைக்கேல் ஸ்லேட்டர் ‘ஸ்காட் மாரிசன் கைகள் ரத்தம் தோய்ந்த கைகள்’ என்று கமெண்ட் போட்டு விட்டார். இதனால் பெரும் சர்ச்சையில் சிக்கினர், மேலும் நீங்கள் எப்படி எங்களை இப்படி நடத்தலாம், ஐபிஎல் தொடரில் பணியாற்ற அரசுதான் எனக்கு அனுமதி அளித்தது, இப்போது அரசே புறக்கணிக்கிறது, என்றும் கருணை இல்லையா என்றும் கடுமையாக பிரதமரையே சாடியது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: