விளையாட்டு

  • associate partner

கொரோனா பாதிப்பு: வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் தொடங்கும் ஐ.பி.எல் தொடர்..!

ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க வரும் வெளிநாட்டு வீரர்கள் பிசினஸ் விசாவில் தான் வருகை தருவார்கள்.

கொரோனா பாதிப்பு: வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் தொடங்கும் ஐ.பி.எல் தொடர்..!
IPL 2020
  • Share this:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மத்திய அரசு கொண்டுவந்து விசா கட்டுபாடுகளால் ஐ.பி.எல் தொடரில் ஏப்ரல் 15-ம் தேதி வரை வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 4000 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாட்டு பயணிகள் இந்தியா வருவதற்கான விசாவில் கட்டுபாடுகள் கொண்டு வரப்பட்டது. அவசர தேவை மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த விசாவிற்கு மற்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து வகையான விசாகளுக்கும் ஏப்ரல் 15ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.


ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க வரும் வெளிநாட்டு வீரர்கள் பிசினஸ் விசாவில் தான் வருகை தருவார்கள். இதனால் ஏப்ரல் 15ம் தேதி வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் கொரானோ அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல் தொடரை தள்ளிவைக்க வேண்டுமென்றும் கோரிக்கைகள் வைக்கப்படுகிறது.

இதற்கிடையே வரும் 14-ம் தேதி ஐபிஎல் நிர்வாகக் குழுவின் கூட்டம் மும்பையில் நடக்கிறது. ஐபிஎல் போட்டி குறித்து அனைத்து முடிவுகளை எடுக்கும் உயர் அதிகாரம் கொண்ட நிர்வாகக் குழுதான், ஐபிஎல் போட்டி ரத்து செய்வது, ஒத்திவைப்பது குறித்த முடிவை அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
First published: March 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading