ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்தியாவின் முதல் டி20 வெற்றியில் தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகன்- சேவாக் கேப்டன்

இந்தியாவின் முதல் டி20 வெற்றியில் தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகன்- சேவாக் கேப்டன்

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

2006, தென் ஆப்பிரிக்கா, ஜொஹான்னஸ்பர்க், டிசம்பர் 1, இந்திய அணி தன் முதல் டி20 சர்வதேசப் போட்டியில் ஆடிய போது தினேஷ் கார்த்திக் அணியில் இருந்தார், அப்போது டி20 கேப்டன் விரேந்திர சேவாக் என்றால் நம்ப முடிகிறதா? அதில் இந்தியா வென்றது. தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகன் ஆன இதே ஆட்டத்தில்தான் தோனி டக் அவுட் ஆனார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  2006, தென் ஆப்பிரிக்கா, ஜொஹான்னஸ்பர்க், டிசம்பர் 1, இந்திய அணி தன் முதல் டி20 சர்வதேசப் போட்டியில் ஆடிய போது தினேஷ் கார்த்திக் அணியில் இருந்தார், அப்போது டி20 கேப்டன் விரேந்திர சேவாக் என்றால் நம்ப முடிகிறதா? அதில் இந்தியா வென்றது. தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகன் ஆன இதே ஆட்டத்தில்தான் தோனி டக் அவுட் ஆனார். அதன் பிறகு எல்லாமே மாறிவிடுகிறது, தோனி கேப்டனாக்கப்படுகிறார், சேவாகின் இடம் தடுமாற்றத்தில் போகிறது. தினேஷ் கார்த்திக் 2007 டி20உலகக்கோப்பையில் சரியாக ஆடவில்லை, கடைசியில் இவர் இடத்துக்கு ரோஹித் சர்மா வருகிறார்.

  தினேஷ் கார்த்திக் கிரிக்கெட் கிராஃப்  கீழே சரிய, தோனியின் கிராஃப் மேலேறியபடியே சென்றது.

  இந்தியா ஆடிய முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 126/9, ஜஸ்டின் கெம்ப் என்ற ஒரு மிகப்பெரிய அதிரடி வீரர் இருந்தார் தென் ஆப்பிரிக்க அணியில், அவர் 22 ரன்கள், பின்னால் சிஎஸ்கேவுக்கு ஆடிய ஆல்பி மோர்கெல் 27 ரன்கள். கேப்டன் கிரேம் ஸ்மித் 16 ரன்கள், இந்தியா தரப்பில் ஜாகீர் கான், அஜித் அகர்க்கர் தலா 2 விக்கெட். ஸ்ரீசாந்த், சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் தலா 1 விக்கெட்.

  இந்திய அணி இலக்கை விரட்டியது கேப்டன் சேவாக் 29 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸ் 34 ரன்கள், சச்சின் 10 ரன்களிலும் தினேஷ் மோங்கியா 38 ரன்கள். பிறகு கிரேட் பினிஷராக உருவெடுத்த தோனி அன்று டக் அவுட். லாங்கிவெல்ட் என்ற பவுலரை லேட் கட் ஆடப்போய் மட்டையில் பட்டு ஸ்டம்பில் பட்டு பவுல்டு ஆனார், தோனி (0). தினேஷ் கார்த்திக் 28 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 31 ரன்கள் எடுத்து நாட் அவுட்,  இந்தியா 19.5 ஓவர்களில் 127/4 என்று வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகன் விருது வென்றார். இன்று அவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார், தன் பயணம் குறித்து தினேஷ் கார்த்திக் கூறும்போது,

  “நான் பல முறை நீக்கப்பட்டிருக்கிறேன், நான் எப்போதும் இந்திய அணியில் மீண்டும் வர விரும்பினேன். நான் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடியிருந்தாலும், ஐபிஎல் விளையாடினாலும், அதுவே எனது மிகப்பெரிய உந்துதலாக இருக்கும். மீண்டும் இங்கு வர வேண்டும், தேசிய சீருடையை அணிந்து இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்ற ஆசை என் வயிற்றில் உள்ள நெருப்பு, நான் தினமும் கனவு காணும் ஒன்று, அதுவே கடந்த பத்தாண்டுகளில் என்னை தொடர்ந்து செல்ல வைத்துள்ளது.

  நான் எப்போதும் எனது விளையாட்டை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டுபிடித்துள்ளேன். என் பயணத்தில் உண்மையில் எனக்கு உதவியவர்கள் இருந்தார்கள். அவர்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள். அவர்கள் என் பயணத்தின் ஒரு பகுதியாகவும், ஏற்ற தாழ்வுகளின் ஒரு பகுதியாகவும் இருந்துள்ளனர், மேலும் நான் எப்போதும் இந்திய அணிக்குத் திரும்ப விரும்பினேன். மிக நீண்ட காலமாக என் வாழ்வில் ஒளிரும் ஒளி இதுதான். இது கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிவிட்டது, நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. நீங்கள் நாட்டிற்காக முதல் டி20 ஐ விளையாடிவிட்டீர்கள், இப்போது நீங்கள் மீண்டும் தென்னாப்பிரிக்காவுடன் விளையாடுகிறீர்கள் என்பது ஒரு நல்ல உணர்வு. இது ஒரு அழகான உணர்வு.” என்றார் தினேஷ் கார்த்திக்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Dinesh Karthik, India vs South Africa, MS Dhoni, T20, T20 World Cup, Virender sehwag