ஓய்வு நாள் என்பதே கிடையாது: ஹர்திக் பாண்டியா வெளியிட்ட வீடியோ..!

இந்த வீடியோவை ஓய்வு என்ற நாளே கிடையாது என்று தலைப்பிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

ஓய்வு நாள் என்பதே கிடையாது: ஹர்திக் பாண்டியா வெளியிட்ட வீடியோ..!
ஹர்திக் பாண்டியா
  • Share this:
ஊரடங்கு உத்தரவு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வரும் நிலையில் ஹர்திக் பாண்டியா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள பிரபலங்கள் பலர் தங்களது அனுபவங்களை வீடியோ மற்றும் புகைப்படங்களாக பகிர்ந்து வருகின்றனர்.

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கடுமையாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பதிவிட்டுள்ளார். வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாலும் உடல் ஆரோக்கியம் முக்கியமானது. உறுதி மற்றும் ஆரோக்கியமாக இருங்கள் என்றுள்ளார். இந்த வீடியோவை ஓய்வு என்ற நாளே கிடையாது என்று தலைப்பிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.




ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தார். காயம் குணமடைந்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றார். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக தென்னாப்பிரிக்கா தொடர் ரத்து செய்யப்பட்டது.











சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading