• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கால் எங்கேயோ இருக்கு.. பேட் எங்கேயோ இருக்கு: விராட் கோலி பேட்டிங் குறித்து கவாஸ்கர் துல்லியத் தாக்கு

கால் எங்கேயோ இருக்கு.. பேட் எங்கேயோ இருக்கு: விராட் கோலி பேட்டிங் குறித்து கவாஸ்கர் துல்லியத் தாக்கு

கோலி அவுட் ஆன ஆண்டர்சன் பந்து.

கோலி அவுட் ஆன ஆண்டர்சன் பந்து.

ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சும்மா போடு அவரே அவுட் ஆயிடுவார் என்று எதிரணி பவுலர்கள் தைரியம் அடையும் அளவுக்கு விராட் கோலி பார்ம் மோசமானதையடுத்து கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

  • Share this:
    ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சும்மா போடு அவரே அவுட் ஆயிடுவார் என்று எதிரணி பவுலர்கள் தைரியம் அடையும் அளவுக்கு விராட் கோலி பார்ம் மோசமானதையடுத்து கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இந்தியாவில் 1970களில் உருவான வீரர்களில் சுனில் கவாஸ்கர், மொகீந்தர் அமர்நாத், ஜி.ஆர்.விஸ்வநாத் போன்றோர் தவிர வேறு யாரும் ஸ்விங் ஆகும் பந்துகளை சரியாக ஆட மாட்டார்கள், அதன் பிறகுதான் சச்சின், லஷ்மண், திராவிட், சேவாக் போன்றவர்கள் வந்தார்கள்.

    எனவே விராட் கோலி செய்யும் தவறென்ன என்பது சுனில் கவாஸ்கரைத் தவிர வேறு யாருக்கும் அதிகம் தெரிய வாய்ப்பில்லை. இதே போல் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துக்கு அவர் தொடர்ச்சியாக ஆட்டமிழப்பது பற்றி சுனில் கவாஸ்கர் கூறும்போது, “அவருக்கு இப்படியாடுவது நிறைய ரன்களை அவருக்கு கொடுத்துள்ளது. பேக் அண்ட் அக்ராஸ் நகர்வில் அவர் 8,000 ரன்கள் பக்கம் எடுத்திருப்பார்.

    ஆனால் இப்போது மிகவும் வெளியே செல்லும் பந்துகளை ஆடுகிறார். அதுவும் கிரீசுக்கு வந்தவுடனேயே ஆடுகிறார். இப்போது கால் எங்கேயோ இருக்கு, பேட் எங்கேயோ இருக்கு.

    அதாவது அவர் நன்றாக ஆடுவதில்லை என்பதற்கு இவை சாட்சி. இது அடிக்கடி அவர் கூறும் வார்த்தை ‘தீவிர நோக்கம்’ (இண்டெண்ட்) என்பதாகும். ஆனால் 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் எல்லா பேட்ஸ்மென்களும் ஸ்கோர் செய்யத்தான் ஆடுகின்றனர், இதில் என்ன பெரிய இன்ண்டெண்ட் வேண்டிக்கிடக்கிறது. அனைவரும் ரன் எடுக்கவே விரும்புவர், ஆனால் முறைதான் வேறு.

    எதிரணியிடம் தாக்குதல் ஆட்டத்தை எடுத்து செல்வது என்று அடிக்கடி கோலி கூறுவது இதற்காகத்தான் என்றால் இதுதான் அவரது பிரச்னை. இது டெஸ்ட் மேட்ச். ஒவ்வொரு பேட்ஸ்மெனுக்கும் ஒவ்வொரு அணுகுமுறை இருக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பழைய பாணியில் மிட் ஆன், மிட் ஆஃப் என்ற ‘வி’-யில் ஆட வேண்டும். இதில் போராடி வென்று பிறகு அடித்து ஆட வேண்டும், எடுத்த எடுப்பிலேயே விராட் கோலி சொல்வது போலோ, அல்லது அவரைப்போலவோ ஆடுவது தவறு, அது பயனளிக்காது” என்றார் சுனில் கவாஸ்கர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: