எதிலும் வெற்றி பெறுவதற்கு வாழ்க்கையில் தான் 4 ஃபார்முலாக்களை கடைபிடிப்பதாகவும், இதை பின்பற்றினாலும் எவரலாறும் வெற்றி பெற முடியும் என்றும் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் கூறியுள்ளார். கோவையில் நடைபெற்ற தனியார் கிரிக்கெட் அகாடமி திறப்பு விழாவில் கிரிக்கெட் வீரர் நடராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது- இயற்கையான சூழலில் இந்த கிரிக்கெட் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமத்து இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் இருந்து திறமையான வீரர்கள் உருவாக வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. என்னைப்போல் பல வீரர்கள் உருவாகுவார்கள் என்று நம்புகிறேன். இதற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் ஏற்கனவே கிரிக்கெட் அகாடமி தொடங்கி விட்டேன். மைதானத்தை உருவாக்கி வருகிறோம். இதற்கான பணிகள் பிப்ரவரியில் நிறைவு பெற்றுவிடும். தற்போது மைதானத்திற்கான வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதை பெரிய அளவில் அறிவிப்பு செய்து நாங்கள் மைதானத்தை தொடங்குவோம். வீரர்கள் யாரும் தங்களால் முடியாது என மனதால் நினைக்ககூடாது. முடியும் என நினைத்து அதற்காக கடின உழைப்பை மேற்கொண்டால் நிச்சயமாக வெற்றி பெற முடியும்.
வெற்றிக்காக நான் பின்பற்றும் விஷயங்கள் நான்கே நான்கு தான். ஒன்று எப்போதும் தன்னடக்கத்துடன் இருப்பேன். 2ஆவது விடாமுயற்சியுடன் இருப்பேன். 3ஆவது தன்னம்பிக்கையுடன் போராடுவேன். 4ஆவது கடினமாக உழைப்பேன். இவைதான் வெற்றிக்காக நான் பின்பற்றும் 4 ஃபார்முலாக்கள். இவற்றை பின்பற்றினால் எதிலும் சாதிக்க முடியும்.
நகரத்தில் இருப்பவர்கள் மட்டுமே கிரிக்கெட்டில் சாதிக்க முடியும் என்று எதுவும் இல்லை.
எங்கே இருந்தாலும் திறமை இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். இப்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு தயாராகிவிட்டேன்.
பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி… நியூசிலாந்து அணி நிதான ஆட்டம்
ஐபிஎல் தொடரில் நான் சிறப்பாக விளையாடினால் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வு பெறுவேன் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket