ஆஸ்திரேலியாவில் கொரோனா விதி மீறல்... ரோஹித், ரிஷப் பந்த், சைனி உட்பட 5 வீரர்களுக்கு சிக்கல்
India vs Australia | இந்திய வீரர்களில் ரோஹித், ரிஷப் பந்த், பிருத்வி ஷா, நவ்தீப் சைனி, ஷுப்மன் கில் ஆகியோர் புத்தாண்டு அன்று வெளி ஓட்டலுக்கு சென்றுள்ளனர்.

Team India
- News18 Tamil
- Last Updated: January 3, 2021, 7:43 AM IST
கொரோனா கட்டுப்பாட்டை மீறிய புகாரில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் உட்பட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று 1-1 என்று சமநிலையில் உள்ளது.
இந்தியா - ஆஸ்ரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் வருகின்ற 7-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், மெல்போர்னில் தங்கியுள்ள இந்திய வீரர்களில் ரோஹித், ரிஷப் பந்த், பிருத்வி ஷா, நவ்தீப் சைனி, ஷுப்மன் கில் ஆகியோர் புத்தாண்டு அன்று வெளி ஓட்டலுக்கு சென்றுள்ளனர். அப்போது, அங்கு வந்த இந்திய ரசிகரான நவல்தீப் சிங், ரோஹித் உள்ளிட்ட வீரர்களை சந்தித்து, அவர்கள் சாப்பிட்டதற்கான பில்-ஐயும் செலுத்தியுள்ளார். பின்னர், இதுகுறித்த வீடியோயை அந்த ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அதில், கொரோனா கட்டுப்பாட்டை மீறியது உறுதியானால் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. அதுவரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய வீரர்கள் 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று 1-1 என்று சமநிலையில் உள்ளது.
இந்தியா - ஆஸ்ரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் வருகின்ற 7-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், மெல்போர்னில் தங்கியுள்ள இந்திய வீரர்களில் ரோஹித், ரிஷப் பந்த், பிருத்வி ஷா, நவ்தீப் சைனி, ஷுப்மன் கில் ஆகியோர் புத்தாண்டு அன்று வெளி ஓட்டலுக்கு சென்றுள்ளனர்.