தலித் சமூகத்துக்கு எதிரான கருத்து: யுவராஜ் சிங் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு

தலித் சமூகத்துக்கு எதிரான கருத்து: யுவராஜ் சிங் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு

yuvraj singh

ஒரு பொறுப்புள்ள இந்தியனாக நான் தெரியாமல் யார் மனதையாவது புண் படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்

 • Share this:
  2020-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தலித் சமூகத்துக்கு எதிராக பேசியதாக அவர் மீது இப்போது முதல் தகவலறிக்கைப் பதியப்பட்டுள்ளது, அதாவது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

  போலீஸ் புகாருக்கு 8 மாதங்களுக்குப் பிறகு இப்போது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யுவராஜ் சிங் அப்போதே தன் கருத்துக்கு மன்னிப்பு கேட்டு விட்டார். தன் கருத்து தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டது என்று அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  இது தொடர்பாக யுவராஜ் சிங் மீது ஹிசார் போலீஸ் நிலையத்தில் பிரிவு 153, 153ஏ, 295, 505 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  கடந்த ஜூன் 2020-ல் ரோஹித் சர்மாவுடன் லைவ் சாட்டில் இருந்த யுவராஜ் சிங், யஜுவேந்திர சாஹலின் டிக்டாக் வீடியோக்கள் பற்றி கூறும்போது ’இவர்களுக்கு... வேறு வேலை இல்லை என்று கூறும்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தாக்கிப் பேசியதாக, இழிவு படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. அதாவது சாஹல், குல்தீப் யாதவ்வைப் பற்றிக் கூறும்போது தலித் சமூகத்தினரை இழிவு படுத்தியதாக சர்ச்சிகள் எழுந்தன.

  ஆனால் உடனேயே யுவராஜ் சிங் அப்போது மன்னிப்புக் கேட்கும் போது, ”எனக்கு எந்த விதப் பாகுபாடு மீதும் நம்பிக்கை இல்லை. அது சாதி, நிறம், தகுதி என்று எதுவாக இருந்தாலும் எனக்குப் பாகுபாடு கிடையாது.

  மக்கள் நலனுக்காகவே நான் என் வாழ்நாளை தொடர்ந்து செலவிடும். வாழ்க்கையின் கண்ணியத்தை நான் மதிப்பவன். விதிவிலக்கு இன்றி அனைவரையும் நான் மதிப்பவன்.

  நான் என் நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் போது என்னைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். ஆனால் ஒரு பொறுப்புள்ள இந்தியனாக நான் தெரியாமல் யார் மனதையாவது புண் படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்” என்றார்.

  இந்நிலையில் அவர் மீது இப்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  2011 உலகக்கோப்பையில் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட யுவராஜ் சிங், பல ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்துள்ளார்.

  புற்றுநோயிலிருந்து மீண்டு பிறகும் இந்திய அணிக்கு ஆடி தன்னை நிரூபித்தவர் யுவராஜ் சிங். அவர் மீதான இந்த வழக்கு அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Muthukumar
  First published: