பட்ஜெட் தாக்கல் இடையே இந்திய அணியின் வரலாற்று வெற்றியை புகழ்ந்த நிர்மலா சீதாராமன்

பட்ஜெட் தாக்கல் இடையே இந்திய அணியின் வரலாற்று வெற்றியை புகழ்ந்த நிர்மலா சீதாராமன்

India vs Australia

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் டிராஃபியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

  • Share this:
    மத்திய பட்ஜெட் உரையின் போது ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பெற்ற வரலாற்று வெற்றியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழ்ந்து பேசினார்.

    நாடாளுமன்றத்தில் 2021-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். கொரோனா பேரிடருக்கு பிறகு பொருளாதாரத்தை தாங்கி பிடிக்கும் பட்ஜெட் என்பதால் பல எதிர்பார்ப்புகள் இருந்தன.

    அதேப்போன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. புதிய வரி விதிப்புகள், தனியார்மயம் தொடர்பான அறிவுப்புகள், புதிய பொருளாதார கொள்கைகள் என பட்ஜெட்டில் பல சிறப்பும்சங்கள் இருந்தன.

    நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து கொண்டிருக்கும் போது ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற்ற இந்திய அணியை பாராட்டி பேசினார். அதில், இந்தியா பல துறைகளில் வலிமை பெற்று வருகிறது. இந்தியாவின் வலிமையை பார்த்து உலக நாடுகளுக்கு நம் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.

    ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இது நமது வலிமையை பரைசாட்டுகிறது. இதை நினைத்து நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும் என்றார்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் டிராஃபியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியை அடைந்த போதும் அடுத்த 3 டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடதக்கது.
    Published by:Vijay R
    First published: