• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • நான் நீக்கப்பட்டதற்கு பயிற்சியாளர் பவாரே காரணம்: மிதாலி ராஜ் சரமாரி குற்றச்சாட்டு

நான் நீக்கப்பட்டதற்கு பயிற்சியாளர் பவாரே காரணம்: மிதாலி ராஜ் சரமாரி குற்றச்சாட்டு

ஆனால், ஒரு நாள் போட்டியில் கேப்டனாக சேஸிங் செய்து வெற்றி பெற்ற சராசரியில், ஆடவர் அணியின் கேப்டன்களை பின்னுக்குத்தள்ளி வெற்றி நடை போடுகிறார். (Getty)

ஆனால், ஒரு நாள் போட்டியில் கேப்டனாக சேஸிங் செய்து வெற்றி பெற்ற சராசரியில், ஆடவர் அணியின் கேப்டன்களை பின்னுக்குத்தள்ளி வெற்றி நடை போடுகிறார். (Getty)

Few People in Power Out to Destroy Me : #MithaliRaj | அதிகாரத்தில் உள்ள சிலரது நடவடிக்கைகளால் தன்னுடைய தன்னம்பிக்கை தகர்க்கப்பட்டதாக பிசிசிஐக்கு மிதாலி கடிதம் எழுதியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் டி-20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தாம் நீக்கப்பட்டதற்கு பயிற்சியாளர் ரமேஷ் பவார் மற்றும் கிரிக்கெட் சங்க உறுப்பினர் டயானா எடூல்ஜியுமே காரணம் என மிதாலி ராஜ் பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.

அண்மையில் மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்தது. இந்த தொடரின்போது, இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததால், இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் பரிதாபமாக தொடரில் இருந்து வெளியேறியது.

முக்கியமான இந்தப் போட்டியில் முன்னணி வீராங்கனையான மிதாலி ராஜ் நீக்கப்பட்டது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் குறித்து நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் மிதாலி ராஜ் ஆகியோரிடம் தனித்தனியாக இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது. அதேபோல், பயிற்சியாளர் ரமேஷ் பவாருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

Ramesh Powar, Mithali Raj, BCCI
பயிற்சியாளர் பவாருடன் மிதாலி ராஜ் (BCCI)


இதற்கிடையே, “அணியில் இருந்து நான் நீக்கப்பட்டதற்கு பயிற்சியாளர் ரமேஷ் பவார் மற்றும் கிரிக்கெட் சங்க உறுப்பினர் டயானா எடூல்ஜி ஆகிய இருவரும் தான் காரணம்" என மிதாலி ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ-க்கு அவர் எழுதியுள்ள
கடிதம் எழுதியுள்ளார். அதில்,

“அதிகாரத்தில் உள்ள சிலரது நடவடிக்கைகளால், என்னுடைய தன்னம்பிக்கை தகர்க்கப்பட்டது. முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் நிர்வாகக் குழு உறுப்பினருமான டயானா எடுல்ஜி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, என்னை அணியில் இருந்து நீக்கிவிட்டார். பயிற்சியாளரான ரமேஷ் பவார் தன்னிடம் பேசுவதையே தவிர்த்தார். நான் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டபோது அவர் என்னை கவனிக்கவே இல்லை. அவரும் ஒரு காரணம்தான்” என்று பரபரப்பு தகவல்களைக் கூறியுள்ளார்.

Mithali-Raj
களத்தில் மிதாலி ராஜ் (BCCI)


மிதாலி ராஜ் நீக்கப்பட்ட சம்பவமும், அதற்குப் பின்னணியில் இருக்கும் சம்பவங்களும் இந்திய கிரிக்கெட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also See...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesan L
First published: