• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கேப்டனாக கோலி பிரியாவிடை: என் தீவிரம் குறைந்தால் நான் கிரிக்கெட்டையே விட்டு விடுவேன்- விராட் கோலி அதிரடி

கேப்டனாக கோலி பிரியாவிடை: என் தீவிரம் குறைந்தால் நான் கிரிக்கெட்டையே விட்டு விடுவேன்- விராட் கோலி அதிரடி

விராட் கோலி.

விராட் கோலி.

  • Share this:
    டி20 உலகக்கோப்பையில் வெறுங்கையுடன் திரும்பியுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் தன் கடைசி ஆட்டத்தை கேப்டனாக ஆடியுள்ளார். ஆனாலும் கேப்டனாக இல்லாவிட்டாலும் என் தீவிரம் குறையாது, அப்படிக் குறைந்தால் இனி ஆடவே மாட்டேன் என்று விராட் கோலி உணர்ச்சிப்பொங்க கூறியுள்ளார்.

    நமீபியாவை நேற்று டி20 உலகக்கோப்பை கடைசி லீக் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்திய பிறகு பேட்டியளித்த விராட் கோலி கூறியதாவது, “முதலில் பெரிய ரிலீஃப். டி20 கேப்டன்சியிலிருந்து விலகுவது நல்ல முடிவுதான். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம், ஆனால் விஷயங்களை சரியான பார்வையில் வைக்க வேண்டும்.

    என்னுடைய பணிச்சுமையை நிர்வகிக்க இதுதான் சரியான நேரம் என்பதை உணர்கிறேன். 6-7 ஆண்டுகள் கடுமையான பணிச்சுமை. பெரிய அழுத்தம் தரும் ஆண்டுகளாகும். வீரர்கள் அபாரம், இந்த உலகக்கோப்பையில் விரும்பத்தக்க முடிவுகள் கிடைக்கவில்லை, ஆனால் நல்ல கிரிக்கெட்டை ஆடினோம். கடைசி 3 ஆட்டங்களில் காட்டிய தீவிரம் முக்கியம், டி 20 கிரிக்கெட் கேம் ஆஃப் மார்ஜின்ஸ்.

    முதல் 2 போட்டிகளில் ஒரு 2 ஓவர்கள் அட்டாக்கிங் கிரிக்கெட்டை ஆடவில்லை. நான் ஏற்கெனவே கூறியது போல் நாங்கள் தைரியமாக ஆடவில்லை. இந்தப் பிரிவு எங்களுக்குக் கடினமாக இருந்தது. டாஸால் தோற்றோம் என்று சாக்குப்போக்கு கூறும் அணி நாங்கள் அல்ல. உதவிப் பயிற்சியாளர்களுக்கு பெரிய நன்றி. இவர்கள் பெரிய காரியம் செய்துள்ளனர். அவர்களுடன் நல்ல சூழ்நிலை உருவாக்கினோம். எங்கள் குடும்பத்தின் விரிவு படுத்தப்பட்ட உறுப்பினர்கள் அவர்கள். அனைவருக்கும் நன்றி.

    கேப்டனாக இல்லாவிட்டாலும் என் தீவிரம் குறையாது, அப்படி தீவிரம் குறைந்தால் நான் ஆடவே மாட்டேன். கேப்டனாக இல்லாத போதும் ஆட்டம் எங்குப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை நான் பார்த்துக் கொண்டுதான் இருப்பேன். நான் ஒன்றுமே செய்யாமல் சும்மா இருக்க மாட்டேன். இந்த உலகக்கோப்பையில் சூரியகுமார் யாதவுக்கு ஆட நேரம் கிடைக்கவில்லை, எனவே அவரை 3ம் நிலையில் இறக்கினோம். புதிய வீரர்களுக்கு உலகக்கோப்பை போட்டியிலிருந்து நல்ல நினைவுகளைக் கொண்டு செல்ல வேண்டாமா அதனால்தான் நான் இறங்காமல் அவரை இறக்கினேன்.” என்றார் விராட் கோலி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: