ஃபவாத் ஆலம் அட்டகாச சதம்; கடைசி 4 விக்கெட்டுகளுக்கு 202 ரன்கள் குவிப்பு; 158 ரன்கள் முன்னிலையுடன் பாக். ஆதிக்கம்

சத நாயகன் பாக்-அணியின் ஃபவாத் ஆலம்.

308/8 என்ற நிலையில் இன்று தொடங்கிய பாகிஸ்தான் மேலும் 70 ரன்களை சேர்த்து 378 ரன்கள் எடுத்து 158 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றது.

  • Share this:
கராச்சி டெஸ்ட் போட்டியில் 33/4 என்று திணறிய பாகிஸ்தான் அணி இடது கை வீரர் ஃபவாத் ஆலம் (109) எடுத்த அபார சதத்தினாலும் கீழ் வரிசை வீரர்களின் அதிரடியின் உதவியினாலும் முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்காவைக் காட்டிலும் 158 ரன்கள் என்ற வலுவான முன்னிலையைப் பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா, மஹராஜ் தலா 3 விக்கெட்டுகளை சாய்க்க, இங்கிடி, நார்ட்யே தலா 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

33/4 என்ற நிலையிலிருந்து 176/6 என்று ஃபவாத் ஆலம், அசார் அலி, பாஹிம் அஷ்ரப் (64) ஆகியோரால் கொண்டு செல்லப்பட்டது, ஆனால் பிறகு ரிஸ்வான் (33), ஹசன் அலி (21), நவ்மன் அலி (24), யாசிர் ஷா 38 நாட் அவுட் ஆகியோரினால் ஸ்கோர் 378 ரன்களுக்கு கொண்டு செல்லப்பட்டது இதில் பவாத் ஆலம் 109 ரன்களில் அணி ஸ்கோர் 278 ஆக இருந்த போது 7வது விக்கெட்டாக வெளியேறினார்.

பவாத் ஆலம் மிகப்பிரமாதமாக ஆடி மஹராஜ் பந்தை மேலேறி வந்து லாங் ஆனுக்கு சிக்சருக்குத் தூக்கி மெஜஸ்டிக்காக சதம் நிறைவு செய்தார்.

அசார் அலி (51), பாஹிம் அஷரப் (64) ஆகியோரது அரைசதங்களும் பாகிஸ்தான் மீண்டு எழுந்ததற்கு உதவின.

35 வயதாகும் ஃபவாத் ஆலம் தன் 8வது டெஸ்ட் போட்டியில்தான் ஆடுகிறார். சந்திரபாலை விடவும் பார்க்க சகிக்காத ஒரு ஸ்டான்ஸ் இவருடையது, ஆனால் ஆட்டம் பிரமாதம். பார்க்க ஒருதரப்பில் நம் ஜடேஜா போலவே இருக்கிறார். இவர் 35 ரன்களில் இருந்த போது டீன் எல்கர் ஸ்லிப்பில் கேட்சை விட்டார். இது காஸ்ட்லி மிஸ் ஆனது. இதனையடுத்து பவாத் ஆலம் அசார் அலியுடன் இணைந்து 94 ரன்களைச் சேர்த்தார்.

ஆனால் கேஷவ் மகராஜ் இந்தக் கூட்டணியை உடைத்தார். அசார் அலி வெளியேறினார். பிறகு ரிஸ்வானுடன் சேர்ந்து ஆலம் 55 ரன்களைச் சேர்த்தார். ரிஸ்வானை இங்கிடி வெளியேற்றினார். அஷ்ரப் உடன் இணைந்தார் பவாத் ஆலம் ஆனால் அஷ்ரப்புக்கு 19 ரன்களில் கேட்சை விட்டார் டி காக்.

308/8 என்ற நிலையில் இன்று தொடங்கிய பாகிஸ்தான் மேலும் 70 ரன்களை சேர்த்து 378 ரன்கள் எடுத்து 158 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றது.

தற்போது தென் ஆப்பிரிக்கா அணி தன் 2வது இன்னிங்ஸில் 22/0 என்று ஆடிவருகிறது. இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 136 ரன்கள் தேவை.
Published by:Muthukumar
First published: