• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் புதிய சாதனை!

ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் புதிய சாதனை!

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஷகிப் (CricketAustalia)

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஷகிப் (CricketAustalia)

All-Time Great All-Rounder Shakib-Al-Hasan | அதிவேக 3000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுக்களை வீழ்த்தி, இயான் போத்தமை பின்னுக்குத்தள்ளி வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் புதிய சாதனை படைத்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிவேக 3000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுக்களை வீழ்த்தி வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் புதிய சாதனை படைத்துள்ளார்.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட்இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட 3 விதமான கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது.

சிட்டகாங் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 64 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் புதிய மைல்கலை எட்டியுள்ளார்.

ஷாகிப் அல் ஹசன்


முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷகிப், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதன்மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அவர் 200 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர், ஏற்கனவே 3000 ரன்களையும் கடந்து இருந்தார்.

அதிவேக 200 விக்கெட்டுகள் மற்றும் 3000 ரன்கள் என்ற மைல்கல்லை ஷகிப் அல் ஹசன் தனது 54-வது டெஸ்ட்டில் எட்டி சாதனை படைத்துள்ளார். இதற்குமுன், இங்கிலாந்தின் இயான் போத்தம் 55 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருந்தார். தற்போது, அந்த சாதனையை ஷகிப் முறியடித்துள்ளார்.

Great All-Rounders
குறைந்த டெஸ்டில் சாதனை படைத்த ஆல்ரவுண்டர்கள் பட்டியல்


அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஷகிப், 5-வது இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில், முதல் 5 இடங்களுக்குள் இருக்கும் ஒரே ஸ்பின்னர் ஆல்ரண்டர் இவர் தான். இந்த சாதனைப்பட்டியலில், 8032 ரன்கள் மற்றும் 235 விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸின் சோப்பர் முதல் இடத்தில் இருக்கிறார்.

Shakib
ஆல்ரவுண்டர்களின் சாதனைப் பட்டியல்


வங்கதேச அணியைச் சேர்ந்த 31 வயதான ஷகிப் அல் ஹசன், ஒட்டுமொத்தமாக டெஸ்ட்டில் 3727 ரன்களும், 201 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். டெஸ்டில் 200 விக்கெட் எடுத்த முதல் வங்கதேச வீரர் என்று பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

Also See...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesan L
First published: