ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஏழ்மையான பின்புலம்.. அப்பாவின் மரணம்.. சோதனைகளை சாதனையாக்கிய 'ஹைதராபாத் எக்ஸ்பிரஸ்' சிராஜ்.!

ஏழ்மையான பின்புலம்.. அப்பாவின் மரணம்.. சோதனைகளை சாதனையாக்கிய 'ஹைதராபாத் எக்ஸ்பிரஸ்' சிராஜ்.!

முகமது சிராஜ்

முகமது சிராஜ்

பும்ராவின் இடத்தை நிரப்ப ஆள் இல்லாமல் போய்விடுமோ என்று இந்திய அணி தவித்த நிலையில் தான் சமீப தனது அசத்தலான பந்து வீச்சு மூலமாக சிராஜ் இந்த உயர்வை பெற்றுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பவுலர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் முகம்மது சிராஜ் முதலிடத்தை பிடித்துள்ளார். சமீப காலமாகவே சிறப்பான பார்மில் இருக்கும் சிராஜ், நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 5 விக்கெட்டுகளையும், இலங்கைக்கு எதிரான தொடரில் சிராஜ் 9 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். பொதுவாகவே இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளர்கள் உலகின் டாப் லெவலில் சோபிப்பது மிக அரிது. முன்னாள் கேப்டனும், தலைசிறந்த ஆல் ரவுண்டருமான கபில் தேவ் தான் ஆரம்ப காலத்தில் இந்தியாவின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக மிளிர்ந்தார். சர்வதேச அளவில் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளர் என்ற இடத்தை பிடித்தார்.

கபில் தேவ்வுக்குப் பின்னர் பல வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியாவுக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்து விளையாடி வந்தாலும் நம்பர் 1 என்ற அளவிற்கு உயரவில்லை. அதை மாற்றி காட்டியவர் ஜஸ்பிரித் பும்ரா. தனது தனித்துவமான பந்துவீச்சு ஸ்டைலால் எதிரணி பேட்ஸ்மேன்களை திக்கமுக்காட வைக்கும் பும்ரா 2017இல் ஐசிசியின் நம்பர் 1 பந்து வீச்சாளர் என்ற இடத்தை பிடித்தார். நம்பர் 1 இடத்தை பிடிக்கும் 2ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆனால் பும்ராவுக்கு காயம் காரணமாக அணியில் இருந்து நீண்ட பிரேக் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: T20 Matches : 2022-ஆம் ஆண்டின் சிறந்த வீரர் சூர்யகுமார் யாதவ்.. ஐசிசி அறிவிப்பு

பும்ராவின் இடத்தை நிரப்ப ஆள் இல்லாமல் போய்விடுமோ என்று இந்திய அணி தவித்த போது தான் சிராஜ் சமீப காலமாகமே தனது அசத்தலான பந்து வீச்சு மூலமாக இந்த உயர்வை பெற்றுள்ளார். 28 வயதான சிராஜுக்கு இந்த உயர்வு மிக எளிதாக கிடைக்கவில்லை.முகமது சிராஜ் மிக எளிமையான பின்புலத்தை கொண்டவர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த சிராஜ்ஜின் தந்தை ஒரு ரிக்ஷா ஓட்டுநர்.

இவர் ஆரம்ப காலத்தில் ரஞ்சி உள்ளிட்ட போட்டிகளில் தனது அபாரமான வேகப்பந்து வீச்சால் பலரின் கவனத்தை ஈர்த்தார். ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் என பெயரும் பெற்றார். இப்படி இருக்க இவருக்கு முதல் அங்கீகாரம் சர்வதேச போட்டி மூலம் கிடைக்கவில்லை. மாறாக இவரது திறமையை கண்டறிந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2017ஆம் ஆண்டு ஏலத்தில் ரூ.2.6 கோடிக்கு ஏலமெடுத்து சிராஜ்ஜிக்கு சர்வதேச தளத்தில் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து.

2017இல் டி20 போட்டிகளில் என்டரி கொடுத்த சிராஜ்ஜிற்கு சர்வதேச ஒரு நாள் போட்டி விளையாடும் வாய்ப்பு 2019இல் தான் கிடைத்தது. ஆனால் தொடக்க காலத்தில் சர்வதேச போட்டிகளில் இவரால் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உயர்வை பெற முடியவில்லை. எக்கனாமி மிக மோசமாக இருக்கும் விதமாக ரன்களை வார வழங்கும் வீரராகவே சிராஜ் பார்க்கப்பட்டார்.

ஐபிஎல் இல் ஆர்சிபி அணிக்கும் கிட்டத்தட்ட 10 ரன்கள் எக்கனாமி வைத்திருக்கும் வீரராக இருக்கிறார். இதன் மூலம் எதிரணிக்கு ரன்களை வாரி வழங்கும் ரன் மெஷின் என கிண்டலுக்கு ஆளானர் சிராஜ். இவ்வாறு தவித்து வந்த சிராஜ்ஜிற்கு 2021 தான் திருப்புமுனை காலமாக இருந்தது. அந்தாண்டில், இந்தியா அணி ஆஸ்திரேலிய பயணம் சென்ற நிலையில், கோவிட் கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்தன. அப்போது அவரது தந்தை எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.

ஆறுதல் சொல்லக்கூட யாரும் இல்லாத வகையில் 14 நாள்கள் தனிமை படுத்திக்கொள்ள வேண்டிய சூழல் சிராஜுக்கு ஏற்பட்டது. அந்த டெஸ்ட் தொடரில் தான் ஆஸ்திரிலேயாவுக்கு எதிராக 13 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது தடத்தை சிறப்பாக பதித்தார். அந்த பார்மை தொடர்ந்து தக்க வைத்து ஒருநாள் போட்டிகளிலும் ஜொலிக்கத் தொடங்கி, இரண்டே ஆண்டுகளில் உலகின் டாப் பந்து வீச்சாளர் என்ற இடத்தை தற்போது பிடித்துள்ளார் சிராஜ். சிராஜ் இதே பார்மை தக்க வைத்து, பும்ராவும் அணிக்கு கம்பேக் கொடுக்கும் பட்சத்தில் இவர்களின் காம்போ மிரட்டலானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


First published:

Tags: ICC Ranking, Mohammed siraj