விவசாயப் போராட்டம் எங்கள் நாட்டுப் பிரச்சனை: சச்சின், கோலி, ரவிசாஸ்திரி உள்ளிட்டோர் ‘இந்தியா டுகெதர்’ மெசேஜ்

இந்திய அணி.

விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து எழும் உலக விமர்சனங்களுக்கு எதிரான ஹேஷ்டேக்குடன் சச்சின், விராட் கோலி, ரவிசாஸ்திரி, கும்ப்ளே உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் ‘இந்தியா டுகெதர்’ மெசேஜை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். 

  • Share this:
    விவசாயப் போராட்டங்களை ஆதரித்து உலகப் பிரபலங்கள் சிலர் ஹேஷ்டேகை ஷேர் செய்து கருத்து தெரிவித்ததற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து எழும் உலக விமர்சனங்களுக்கு எதிரான ஹேஷ்டேக்குடன் சச்சின், விராட் கோலி, ரவிசாஸ்திரி, கும்ப்ளே உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் ‘இந்தியா டுகெதர்’ மெசேஜை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.

    மத்திய வெளியுறவு அமைச்சகம் உருவாக்கிய இரண்டு ஹேஷ்டேகுகள் #IndiaAgainstPropaganda மற்றும் #IndiaTogether ஆகியவையாகும். இந்த ஹேஷ்டேகுகளைப் பகிர்ந்து கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் விவசாயப் போராட்ட ஆதரவு விமர்சனங்களை எதிர்த்து ட்விட்டரில் பதிவு மேற்கொண்டுள்ளனர்.

    சச்சின் டெண்டுல்கர் தன் ட்விட்டர் பக்கத்தில், “ இந்தியாவின் இறையாண்மையில் சமரசம் செய்து கொள்ள முடியாது. புறச்சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாமே தவிர பங்கேற்க முடியாது. இந்தியர்களுக்கு இந்தியாவைத் தெரியும். இந்தியர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். ஒரு தேசமாக இணைந்திருப்போம்” என்று ட்வீட் செய்துள்ளார்.

    விராட் கோலி: கருத்து வேறுபாடுகளின் இந்த நேரத்தில் நாம் ஒன்றாக இருப்போம். விவசாயிகள் நம் நாட்டுடன் ஒருங்கிணைந்தவர்கள். இதில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் அமைதி மற்றும் ஒன்றிணைந்து முன்னேறுவதற்கான சுமுக தீர்வை கண்டுப்பிடிப்பார்கள் என்று நம்புகிறேன் என்று #IndiaAgainstPropaganda மற்றும் #IndiaTogether ஹேஷ்டேகுகளை பகிர்ந்துள்ளார்.

    ரோஹித் சர்மா: நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தீர்வு காணும்போது நம் தேசம் எப்போதும் வலிமையாக இருந்துள்ளது. நம் நாட்டின் நன்மைக்கான பங்களிப்பில் விவசாயிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். எனவே அனைவரும் சுமுகத் தீர்வு காண ஒன்றிணைந்து செயல்படுவார்கள்.

    ரஹானே: நாம் ஒன்றாக இருந்தால் தீர்க்க முடியாத பிரச்சனை என்பது எதுவும் இருக்க முடியாது. நாம் ஒன்றிணைந்து நம் உள்நாட்டு விவகாரங்களைத் தீர்க்க பாடுபடுவோம்.

    ஹர்திக் பாண்டியா: ஸ்டாங்கர் டுகெதர்.

    ரவி சாஸ்திரி:   இந்தியப் பொருளாதார அமைப்பின் முக்கிய எந்திரம் விவசாயம். விவசாயிகள் எந்த நாட்டின் பொருளாதார அமைப்பின் முதுகெலும்பாவார்கள். இது உள்நாட்டு பிரச்சனை, உரையாடல் மூலம் நிச்சயம் தீர்வு காணப்படும் ஜெய் ஹிந்த்.

    அனில் கும்ப்ளே: இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக உள்நாட்டு விவகாரங்களை சுமுகமாகத் தீர்ப்பதில் திறன்படைத்தது என்பதற்கும் மேலான தன்மை கொண்டது. முன்னேறுவோம், மேலேறிச் செல்வோம்.

    கவுதம் கம்பீர்: புறச்சக்திகள் நம்மைப் பிரித்தாள நூற்றாண்டுகளாக முயற்சி செய்கின்றனர். என்ன வந்தாலும் இந்தியா இதனை எதிர்த்து மீண்டு வரும். உங்கள் பில்லியன்களைப் பயன்படுத்துங்கள். சிறந்தவற்றை முயற்சி செய்யுங்கள். இது புது இந்தியா.

    சுரேஷ் ரெய்னா: நாம் ஒரு நாடாக  தீர்ப்பதற்குரிய பிரச்சினைகள் இன்றும் உள்ளன, நாளையும் இருக்கும். அதற்காக நாம் பிரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. புறச்சக்திகளினால் குழப்பமடைய வேண்டியதில்லை. நடுநிலைமையான உரையாடல் மூலம் அனைத்துக்கும் சுமூக தீர்வு உள்ளது.

    இவ்வாறு கிரிக்கெட் வீரர்கள் பதிவிட்டுள்ளனர்.
    Published by:Muthukumar
    First published: