Home » News » Sports » CRICKET FARMER MS DHONI TO SEND VEGETABLES FROM HIS FARMHOUSE TO DUBAI MUT

காய்கறி வியாபாரத்தில் இறங்கிய எம்.எஸ்.தோனி: துபாய்க்கு ஏற்றுமதி செய்கிறார்

ராஞ்சியில் நல்ல கிராக்கி இருந்தும் தோனி காய்கனிகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்ய முடிவெடுத்துள்ளார்.

காய்கறி வியாபாரத்தில் இறங்கிய எம்.எஸ்.தோனி: துபாய்க்கு ஏற்றுமதி செய்கிறார்
தோனியின் பண்ணை வீடு.
  • Share this:
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி விவசாயத்தில் இறங்கியுள்ளார். தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை அவர் துபாய்க்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளார்.

விவசாயத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்த தோனி ராஞ்சியில் உள்ள செம்போ கிராமத்தில் உள்ள தன் பண்ணை வீட்டில் காய்கறிகளைப் பயிரிட்டார்.

இங்குள்ள 43 ஏக்கர் நிலப்பரப்பில் 10 ஏக்கர்களில் அவர் தக்காளி, முட்டைக்கோஸ், பட்டாணி, பப்பாளி, ஸ்ட்ராபெரி என பலவகை காய்கனிகளை பயிரிட்டார். இவற்றுக்கு ராஞ்சியில் நல்ல கிராக்கி இருந்தும் தோனி காய்கனிகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்ய முடிவெடுத்துள்ளார்.


இந்த ஏற்றுமதிக்கான பொறுப்பை ஜார்கண்ட் மாநில விவசாயத்துறை எடுத்துக் கொண்டுள்ளது.

துபாயில் இவற்றை வாங்கும் நிறுவனமும் அடையாளம் காணப்பட்டுள்ளது. தோனி வீட்டு காய்கறிகள் என்ற பெயரில் இது வளைகுடா நாடுகள் முழுதும் சப்ளை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

துபாயில் உள்ள ஆல் சீசன் பார்ம் பிரெஷ் ஏஜென்சி தோனியின் காய்கனிகளை துபாயில் விற்கவுள்ளது. வளைகுடா நாடுகளுக்கு இந்த ஏஜென்சி மூலம்தான் காய்கறிகள் செல்கின்றன.தோனிக்கு துபாயில் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது புத்தாண்டை தோனி துபாயில்தான் தன் குடும்பத்துடன் கொண்டாடினார்.
First published: January 3, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories