ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20 உலகக் கோப்பை ஃபைனில் இந்தியா - பாகிஸ்தான்.. ஆசையை சொன்ன வாட்சன்!

டி20 உலகக் கோப்பை ஃபைனில் இந்தியா - பாகிஸ்தான்.. ஆசையை சொன்ன வாட்சன்!

வாட்சன்

வாட்சன்

"முதல் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. அதேபோல் மறுபடியும் நடக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்"

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaAustraliaAustralia

  டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவதை காண மக்கள் விரும்புகின்றனர் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் வாட்சன் தெரிவித்துள்ளார்.

  டி20 உலக கோப்பை இறுதி ஆட்டம் நெருங்கிவிட்டது. இதில் சிட்னியில் நாளை நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. நவம்பர் 10ஆம் தேதி நடைபெறவுள்ள மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

  இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வாட்சன், “இந்த ஆட்டங்களில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்று, இறுதி ஆட்டத்தில் அவர்கள் போடியிட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். துரதிஷ்டவசமாக சூப்பர் 12 சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதியதை நேரில் பார்க்க முடியாமல் போனது.

  அந்த ஆட்டத்தை டிவியில் பார்த்து வியந்து போனேன். முதல் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. அதேபோல் மறுபடியும் நடக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்” என தெரிவித்தார்.

  பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். “இந்தியாவும் பாகிஸ்தானும் அரைஇறுதி போட்டிகளுடன் நாடு திரும்ப மாட்டார்கள் என நம்புகிறேன். இறுதி ஆட்டத்தில் இந்ஹ்டியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்வதை பார்க்க விரும்புகிறேன்” என்றார்.

  மேலும் “பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து அணியின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. பாகிஸ்தான் அணியும் இன்னும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை” என கூறினார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Cricket match, T20 World Cup