ஐபிஎல் ஊடக உரிமைகள் உட்பட ரூ.60,000 கோடி அளவில் சம்பாதித்து பண
மழையில் திளைக்கும் பிசிசிஐ கிரிக்கெட் உள்கட்டமைப்புகளுக்கு செய்வோம் என்று கூறுவது வெறும் வாய்ப்பந்தலா என்ற கேள்வி எழுவதாக ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர், பெங்களூருவில் அன்று இந்தியா-தென் ஆப்பிரிக்கா கடைசி டி20 போட்டியின் போது மழை கொட்டியதில் ஸ்டேடியத்தில் மக்கள் அமரும் பகுதியில் ஒரு இடத்தில் மழை நீர் ஒழுகத் தொடங்கியது.
கொட்டும் மழையில் ஒழுகும் ஸ்டேடியத்தின் படங்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. பெரிய பணமுதலை கிரிக்கெட் வாரியம் ஆனால் உள்கட்டமைப்பு இல்லை என்று ரசிகர்கள் முகத்தில் கோபாவேசமும், ஏமாற்றமும் தெரிந்தன.
ரசிகர்களுக்காக கிரிக்கெட்டா அல்லது ஒளிபரப்பு நிறுவனங்கள் சம்பாதிப்பதை குறிக்கோளாகக் கொள்வதுதான் பிசிசிஐ-யின் நிர்வாகமா என்று பெங்களூரு சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இப்படிப் பட்ட ஸ்டேடியத்தில் நடத்தியதற்காக போட்டியின் பணத்தை திரும்பி கேட்டு சில ரசிகரகள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பெரிய தொகையை எங்களிடம் பிடுங்கிக்கொண்டு ரசிகர்களை 3ம் தர குடிமக்கள் போல் நடத்துவதாக இன்னொரு ரசிகர் தன் சமூக ஊடக்த்தில் கோபாவேசத்தை வெளிப்படுத்தினார்.
இந்தியா ஒரு சிறந்த கிரிக்கெட் நாடு என்கிறார்கள் உண்மை என்னவோ இதுதான் என்று இன்னொரு பயனாளர் கடுகடுப்புடன் பகிர்ந்துள்ளார். இது மட்டுமல்ல பில்லியன் டாலர்கள் பெறுமான பிசிசிஐ- நடத்தும் பல மைதானங்களின் நிலலி இதுதான் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தன் பதிவில், அத்தகைய மைதானங்களின் தரம் மற்றும் நிலையை மேம்படுத்த வேண்டிய அவசரத்தை எடுத்துரைத்தார். “இந்திய கிரிக்கெட், உள்ளிழுக்கும் கூரையுடன் கூடிய ஓரிரு ஸ்டேடியங்களில் முதலீடு செய்ய வேண்டும்… ஒளிபரப்பு உரிமைகள் மீதான பணத்தின் அளவு பாயும் நிலையில், காலநிலையை ஒன்றுமில்லாமல் செய்யும் மேற்கூரைகளில் முதலீடு செய்யுங்கள்”என்று அவர் ட்விட்டரில் எழுதினார்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.