ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

என்னப்பா இவரை விட்டுட்டீங்க..? சிஎஸ்கே அணியை வச்சு செய்யும் ரசிகர்கள்!

என்னப்பா இவரை விட்டுட்டீங்க..? சிஎஸ்கே அணியை வச்சு செய்யும் ரசிகர்கள்!

ஜெகதீசன் நாராயணன்

ஜெகதீசன் நாராயணன்

இந்த இன்னிங்ஸிற்கு பிறகு, இந்த வீரரை ஏன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது அணியில் இருந்து விடுவித்தது என கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தமிழக வீரரான ஜெகதீசன் தொடர்ச்சியாக 5 சதங்களை அடித்தது மட்டுமில்லாமல், பல புதிய சாதனைகளை படைத்துள்ளார்.

    அதிரடியாக விளையாடிய தமிழக வீரர் ஜெகதீசன், 141 பந்துகளில் 15 சிக்சர்கள், 25 பவுண்டரிகள் என மொத்தம் 277 ரன்களை எடுத்தார். இதன் மூலம், ரோகித் ஷர்மா, ஏடி பிரௌன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார் ஜெகதீசன்.

    இதுமட்டுமில்லாது, தொடர்ந்து 5 போட்டிகளில் சதம் அடித்ததன் மூலம், குமார் சங்ககரா, தேவ்தத் படிக்கல் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி, லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் சதமடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார் ஜெகதீசன் நாராயணன்.

    இவரின் இந்த இன்னிங்ஸிற்கு பிறகு, இந்த வீரரை ஏன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது அணியில் இருந்து விடுவித்தது என கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    Published by:Raj Kumar
    First published:

    Tags: Chennai Super Kings, CSK, Vijay Hazare, Vijay hazare trophy