ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தினேஷ் கார்த்திக் பெயரைச் சொல்லி முரளி விஜயை படுத்திய ரசிகர்கள்

தினேஷ் கார்த்திக் பெயரைச் சொல்லி முரளி விஜயை படுத்திய ரசிகர்கள்

முரளி விஜய்

முரளி விஜய்

சமீபத்திய TNPL 2022 போட்டியின் போது, ​​​​மைதானத்தில் முரளி விஜய் முன்பு ரசிகர்கள் தினேஷ் கார்த்திக்கின் பெயரைக் கோஷமிடத் தொடங்கியதால், அவர் ஃபீல்டிங் செய்யும்போது அவருக்கு சங்கடமாக இருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சமீபத்திய TNPL 2022 போட்டியின் போது, ​​​​மைதானத்தில் முரளி விஜய் முன்பு ரசிகர்கள் தினேஷ் கார்த்திக்கின் பெயரைக் கோஷமிடத் தொடங்கியதால், அவர் ஃபீல்டிங் செய்யும்போது அவருக்கு சங்கடமாக இருந்தது.

கார்த்திக்கின் முதல் மனைவி நிகிதா வஞ்சாரா முரளி விஜய்யுடன் உறவு வைத்திருந்ததாகக் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்தது. பின்னர், தினேஷ் கார்த்திக் நிகிதாவிடம் விவாகரத்து பெற்றார். பின்னர் நிகிதா, முரளி விஜய்யை திருமணம் செய்து கொண்டார், தினேஷ் கார்த்திக் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கலை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் டிஎன்பிஎல் போட்டியின் போது மைதானத்தில் ரசிகர்கள் தினேஷ் கார்த்திக்கின் பெயரை ‘டிகே, டிகே’ என்று உச்சரிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்கில் வைரல் ஆகி வருகிறது. ஒரு கட்டத்தில் ரசிகர்களை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டார் முரளி விஜய்.

விஜய் இந்த ஆண்டு டிஎன்பிஎல் போட்டிகளில் 224 ரன்கள் குவித்துள்ளார். 38 வயதான அவர் 172.3 ஸ்ட்ரைக் ரேட்டுடன் லீக்கில் ஐந்தாவது அதிக ரன் எடுத்தவர் ஆவார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக தினேஷ் கார்த்திக் நேற்று மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு புறப்பட்டார். தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2022-ல் முரளி விஜய் விளையாடி வருகிறார்.

டிஎன்பிஎல் 2022-ல் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் விஜய், டி20 லீக்கில் தனது இரண்டாவது சதத்தை அடித்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிராக ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்காக விஜய் 66 பந்துகளில் 121 ரன்களுடன் 12 சிக்ஸர்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Dinesh Karthik, Murali Vijay, TNPL