தோனிக்கு ஆதரவாக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘என்றும் தல தோணி’

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோனி 31 பந்துகளில் 42 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

தோனிக்கு ஆதரவாக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘என்றும் தல தோணி’
தோனி
  • News18
  • Last Updated: July 1, 2019, 4:51 PM IST
  • Share this:
‘என்றும் தல தோனி’ என்ற ஹேஷ்டேக்கை தோனி ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.

உலகக்கோப்பை தொடர் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியைச் சந்தித்தது இந்திய அணி. இந்தத் தோல்வி 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு முதல் தோல்வியாகும்.

இந்திய அணியின் தோல்விக்கு பேட்டிங், பந்துவீச்சு என பல காரணங்கள் இருந்தாலும், வழக்கம் போல நெட்டிசன்கள் தோனியையே குறை சொல்லி வருகின்றனர். நேற்றைய போட்டியில் தோனி 31 பந்துகளில் 42 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கடைசி நேரத்தில் தோனி அதிரடியாக விளையாடாததே இந்திய அணியின் தோல்விக்குக் காரணம் என்று கூறி நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தோனியை வைத்து மீம்ஸ்களை பறக்கவிட்டனர்.


இதற்கு பதிலடியாக தோனி ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக மீம்ஸ்களை தயார் செய்தனர். மேலும் ‘என்றும் தல தோணி’ என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
First published: July 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading