Home /News /sports /

சைமண்ட்ஸ் அஞ்சலி இமோஜியை மாத்துங்க மிஸ்டர் லஷ்மண்- நெட்டிசன்கள் அறிவுறுத்தல்

சைமண்ட்ஸ் அஞ்சலி இமோஜியை மாத்துங்க மிஸ்டர் லஷ்மண்- நெட்டிசன்கள் அறிவுறுத்தல்

லஷ்மண் - சைமண்ட்ஸ்

லஷ்மண் - சைமண்ட்ஸ்

முன்னாள் ஆஸ்திரேலிய அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் அகால மரணமடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கிரிக்கெட் உலகம் அவருக்கு புகழஞ்சலி செலுத்துவதோடு பலரும் துயரம் தோய்ந்த அஞ்சலி ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் ரசிகர்கள் சிலர் சைமண்ட்ஸ் மறைவுக்கு விவிஎஸ் லஷ்மண் மேற்கொண்ட அஞ்சலி ட்வீட்டில் தவறு கண்டுப்பிடித்தனர்.

இதனையடுத்து மரியாதையுடன் மிஸ்டர் விவிஎஸ் லஷ்மண், பொருத்தமில்லாத இமோஜியை தேர்வு செய்துள்ளீர்கள் சரியான இமோஜியைப் பதிவேற்றுங்கள் என்று அவருக்கு அறிவுறுத்தினர்.

’இந்தியாவில் இங்கு எழுந்தவுடன் அதிர்ச்சி செய்தி. ரெஸ்ட் இன் பீஸ் மை டியர் பிரெண்ட். பெரிய துயரச் செய்தி’ என்று லஷ்மண் பதிவிட்டு இமோஜி ஒன்றை ஷேர் செய்திருந்தார். அது ‘ஆனந்தக் கண்ணீர்’ இமோஜி. அதாவது மகிழ்ச்சியில் வரும் கண்ணீரைக் குறிக்கும் இமோஜி. லஷ்மண் தவறாக இண்டஹ் இமோஜியை தேர்வு செய்ததாக நெட்டிசன்கள் அவருக்கு அறிவுறுத்தினர்,

ட்வீட்டை உடனே அகற்றி வேறு ட்வீட் போடுங்கள் என்று ரசிகர்கள் அவருக்கு உடனடியாகத் தெரிவித்தனர்.









கடைசியில் லஷ்மண் தான் தவறான இமோஜியை தேர்வு செய்ததாக ஒப்புக் கொண்டார். லஷ்மணும், சைமண்ட்சும் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒன்றாக ஆடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Muthukumar
First published:

Tags: Andrew Symonds, VVS Laxman

அடுத்த செய்தி