“இந்தியர்களுக்கு இந்திதான் தாய்மொழி“ கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு

“இந்தியர்களுக்கு இந்திதான் தாய்மொழி“ கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு
  • Share this:
இந்தி தான் இந்தியர்கள் அனைவருக்கும் தாய் மொழி என்று ரஞ்சி டிராஃபி தொடரில் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ரஞ்சி டிராபி தொடரில் கர்நாடகா - பரோடா அணிகள் மோதும் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது கிரிக்கெட் வர்ணனையளார்கள் இந்தி குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அந்தப் போட்டியின் போது பேசிய வர்ணனையாளர்கள் முதலில் சுனில் கவாஸ்கரை புகழ்ந்து பேசுகின்றனர். அதையடுத்து இந்தி தான் இந்தியர்களுக்கு தாய்மொழி. ஒவ்வொரு இந்தியரும் இந்தியை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். இதைவிட பெரிய மொழி வேற எதுவுமில்லை“ என்றுள்ளனர்.




இந்தி குறித்து இவர்கள் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. கிரிக்கெட் வர்ணனையாளர்களின் பேச்சுக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.







நீங்கள் இந்திக்காக பிரச்சாரம் செய்து வருகிறீர்களா..? எனறும் இவர்களுக்கு இந்திய தேசிய மொழி இல்லை என்பதே தெரியவில்லை என்றும் பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்