சிஎஸ்கே வீரர்களை சுற்றி வளைத்து செல்ஃபி எடுத்த ரசிகர்கள்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி

சிஎஸ்கே வீரர்களை சுற்றி வளைத்து செல்ஃபி எடுத்த ரசிகர்கள்!
சிஎஸ்கே
  • News18
  • Last Updated: April 1, 2019, 11:24 AM IST
  • Share this:
சென்னை அணி வீரர்கள் சென்ற பேருந்து மைதானத்தின் நுழைவு வாயிலில் சிக்கியதால் ரசிகர்கள் செல்ஃபி எடுக்க பேருந்தை சுற்றி வளைத்தனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் அணியை சென்னை அணி வீழ்த்தியது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

இதையடுத்து போட்டி முடிந்து, நள்ளிரவு 1.20 மணியளவில் சென்னை அணி வீரர்கள் பேருந்தில் வெளியேறினர். ஆனால் மைதான நுழைவு வாயிலின் முன்புறம் காவல்துறையின் இழுவை வாகனமும், சில ஆட்டோக்களும் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் பேருந்து வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.


சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் ஓட்டுநர்கள் இல்லாததால், வீரர்களுடன் வந்த பேருந்தை வெளியே எடுக்க முடியாமல் அதன் ஓட்டுநர் திண்டாடினார். மேலும், 15 நிமிடங்கள் பேருந்தை முன்னும் பின்னுமாக எடுக்க முயற்சித்தும் பயனளிக்காததால், வீரர்கள் அதிருப்தியடைந்தனர்.

பேருந்து செல்லாமல் ஒரே இடத்தில் நின்றதை பார்த்த ரசிகர்கள் ஓடி வந்து பேருந்தை சூழ்ந்துகொண்டு செல்ஃபியும், வீடியோவும் எடுத்தனர்.

இதனால் பேருந்து ஒரே இடத்தில் நிற்கும் நிலை ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த 10-க்கும் குறைவான காவலர்கள் பேருந்து அருகில் வந்து நிலைமையை உணர்ந்து ரசிகர்களை விரட்டினர்.பின்பு அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களை கைகளால் தள்ளி பேருந்து செல்லும் அளவுக்கு வழி ஏற்படுத்தித் தந்தனர். பின்னர் சரியாக 1.35 மணிக்கு பேருந்து மைதானத்தை விட்டு வெளியேறியது.

Also watchPOINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்