இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி ராஞ்சி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழந்து 176 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டாரில் மிட்சல் 59 ரன்கள் சேர்த்தார். இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
177 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க மிடில் ஆர்டர் சற்று தாக்கு பிடித்தனர். எனினும் விக்கெட்டுகள் சரிந்ததால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் அரை சதமும் சூர்ய குமார் யாதவ் 47 ரன்களும் எடுத்தனர். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியை காண இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மைதானத்திற்கு வந்திருந்தார். இவரை பெரிய திரையில் காட்டியவுடன் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவருமே “தோனி... தோனி..” என இவரின் பெயரை கத்த ராஞ்சி மைதானத்தில் சிறிது நேரம் அவரின் பெயர் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. இவரும் தன் பெயரை கத்திய ரசிகர்களுக்கு பெரிய திரையில் காட்டும்போது கையசைத்தார்.
MSD + Ranchi = 🤩
When the Ranchi crowd welcomed the legendary @msdhoni in style 😃👌#TeamIndia | #INDvNZ | @mastercardindia pic.twitter.com/40FoEDudSv
— BCCI (@BCCI) January 27, 2023
இந்த வீடியோவை பிசிசிஐ தனது சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளது. தோனி ரசிகர்களும், தோனிக்கு எப்போதுமே ரசிகர்களின் ஆதரவு உண்டு என இந்த பதிவிற்கு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ind vs NZ, India vs New Zealand, Mahendra singh dhoni, MS Dhoni