முகப்பு /செய்தி /விளையாட்டு / டெல்லி டெஸ்டில் ‘ஆர்.சி.பி.’ என கத்திய ரசிகர்களை அதட்டிய விராட்கோலி… வைரலாகும் வீடியோ

டெல்லி டெஸ்டில் ‘ஆர்.சி.பி.’ என கத்திய ரசிகர்களை அதட்டிய விராட்கோலி… வைரலாகும் வீடியோ

விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி, தனது இந்திய அணியின் ஜெர்சியை சுட்டிக்காட்டினார். இதன்பின்னர் ரசிகர்கள், ‘இந்தியா இந்தியா’ என்று குரல் எழுப்பினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டெல்லி டெஸ்டின் போது விராட் கோலியை பார்த்து ரசிகர்கள் ‘ஆர்.சி.பி.,  ஆர்.சி.பி’ என கத்தினர். அவர்களை செல்லமாக விராட் கோலி அதட்டினார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகில் நம்பர் ஒன் டெஸ்ட் கிரிக்கெட் அணியாக இருந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு, இந்திய அணி பெரும் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடுத்ததாக டெல்லியில் நடந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று, 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் டெல்லி டெஸ்டின் போது, இந்திய அணி பந்து வீசிக் கொண்டிருந்த நேரத்தில், விராட் கோலியை பார்த்து ரசிகர்கள் ஆர்சிபி ஆர்சிபி என்று கத்தினர். அதாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஆர்சிபி அணியின் முக்கிய ஆட்டக்காரராக இருந்து வருகிறார். அவரை உற்சாகப்படுத்தும் வகையில், ரசிகர்கள் இவ்வாறு கத்தி குரல் எழுப்பினர். அவர்களை நோக்கி செல்லமாக அதட்டிய விராட் கோலி, தனது இந்திய அணியின் ஜெர்சியை சுட்டிக்காட்டினார். இதன்பின்னர் ரசிகர்கள், ‘இந்தியா இந்தியா’ என்று குரல் எழுப்பினர்.

இதுதொடர்பான சிறிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் நேற்றிலிருந்து வைரலாகி வருகிறது. விராட் கோலியின் செயலை பல்வேறு நபர்களும் பாராட்டி வீடியோவை பகிர்ந்துள்ளனர். முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், அடுத்த போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மார்ச் 1ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடும். இதனால் இந்த ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

First published:

Tags: Cricket