ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

மைதானத்தில் அழுதுகொண்டே ரோகித்தை பார்க்க ஓடிய சிறுவன்.. ரூ.6.5 லட்சம்  அபராதம் விதித்த அதிகாரிகள்!

மைதானத்தில் அழுதுகொண்டே ரோகித்தை பார்க்க ஓடிய சிறுவன்.. ரூ.6.5 லட்சம்  அபராதம் விதித்த அதிகாரிகள்!

மைதானத்தில் ரோகித் சர்மாவை நோக்கி ஓடி வந்த சிறுவன்

மைதானத்தில் ரோகித் சர்மாவை நோக்கி ஓடி வந்த சிறுவன்

ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது அவரை நோக்கி சிறுவன் ஒருவன் கண்ணீர் மல்க ஓடி வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  • ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது மைதானத்தில் ரோகித் சர்மாவை நோக்கி ஓடி வந்த சிறுவனுக்கு ரூ.6.5 லட்சம்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
  • டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று இன்றோடு நிறைவடைகிறது. ஏற்கனவே இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், இன்றைய ஆட்டத்தில் ஜிம்பாவே அணியுடன் மோதியது. மெல்போர்னில் நடைபெற்ற இந்த போட்டியில் இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர்களுக்கு 186 ரன்களை ரன்களை சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 61 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

   இதனையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாவே அணி 17.2 ஓவர்களில் 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டை இழந்தது. இதனால் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும் பாண்டிய மற்றும் ஷமி தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

   இதையும் படிங்க:  என்னதான் ஆச்சு? ரோகித் முதல் பாபர் வரை.. டி20ல் சொதப்பும் அணியின் கேப்டன்கள்!

   அப்போழுது இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது மைதானத்தில் ரோகித் சர்மாவை பார்க்க வேண்டும் என கண்ணீர் மல்க பாதுகாப்பு அதிகாரிகளை மீறி ஓடி வந்தார். இதனை பார்த்த பாதுகாவலர்கள் அந்த சிறுவனை தடுத்து நிறுத்தி இழுத்து சென்றனர். அப்போழுது ரோகித் சர்மா ரசிகர் சிறுவன் என்பதால் பாதுகாவலர்களிடம் பத்திரமாக அழைத்து செல்லுங்கள் என அவர்களுக்கு அறிவிரை வழங்கினார். இந்த நிலையில் விதிகளை மீறி மைதானத்திற்குள் ஓடி வந்த சிறுவனுக்கு இந்திய மதிப்பீல் ரூ.6.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: India captain Rohit Sharma, Melbourne