சேப்பாக்கம் மைதானத்தில் பாதுகாப்பை மீறி திடீரென நுழைந்த ரசிகர்.. திகைத்துப் போன இங்கிலாந்து வீரர்கள்

சேப்பாக்கம் மைதானத்தில் பாதுகாப்பை மீறி திடீரென நுழைந்த ரசிகர்.. திகைத்துப் போன இங்கிலாந்து வீரர்கள்

சேப்பாக்கம் மைதானம்

கொரோனோ வைரஸ் பரவல் காரணமாக சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்றது.

  • Share this:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போலீசாரின் பாதுகாப்பை மீறி ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த போதும் கேப்டன் விராட் கோலி மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் பொறுப்புடன் விளையாடி வருகின்றனர்.

மூன்றாம் நாள் ஆட்டம் உணவு இடைவேளையின் போது ரசிகர் ஒருவர் மைதானத்தின் பாதுகாப்பு வேலியை தாண்டி இங்கிலாந்து வீரர்களை நோக்கி சென்றுள்ளார். பயிற்சியில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து வீரர்கள் கொரோனோ பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பதால் அந்த ரசிகரை சந்திக்க மறுத்துவிட்டனர். பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அந்த ரசிகரை  மைதானத்தை விட்டு வெளியேற்றி அழைத்துச்சென்றனர். இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

சேப்பாக்கம் மைதானத்திற்கு உள்ளே பாதுகாப்பு  வேலியை தாண்டி சென்ற நபர் சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் நிகித் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னதாக கிரிக்கெட் வீரர் அஸ்வினிடம் பயிற்சி பெற்றதாகவும் அவரை சந்திக்கவே மைதானத்திற்கு உள்ளே சென்றதாக நிகித் கூறியதாக தகவல் கிடைத்துள்ளது.

கொரோனோ வைரஸ் பரவல் காரணமாக சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு 50 சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் ரசிகரின் இதுபோன்ற செயல் இனிவரக்கூடிய போட்டிகளை பாதிக்கும் என கூறப்படுகிறது.
Published by:Vijay R
First published: