• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Faf Du Plessis | மூளை அதிர்ச்சி: சிகிச்சை முடிந்து நாடு திரும்புகிறார் டுபிளெசிஸ்

Faf Du Plessis | மூளை அதிர்ச்சி: சிகிச்சை முடிந்து நாடு திரும்புகிறார் டுபிளெசிஸ்

ஃபாப் டுபிளெசிஸ்.

ஃபாப் டுபிளெசிஸ்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆடிய போது சக வீரருடன் ஏற்பட்ட மோதலில் தலையில் காயமடைந்த தென் ஆப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் சிகிச்சை முடிந்து தங்கும் விடுதிக்குத் திரும்பினார். பாகிஸ்தான் சூப்பர் லீகிலிருந்து விலகிய இவர் நாடு திரும்பவுள்ளார்.

  • Share this:
    பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆடிய போது சக வீரருடன் ஏற்பட்ட மோதலில் தலையில் காயமடைந்த தென் ஆப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் சிகிச்சை முடிந்து தங்கும் விடுதிக்குத் திரும்பினார். பாகிஸ்தான் சூப்பர் லீகிலிருந்து விலகிய இவர் நாடு திரும்பவுள்ளார்.

    கொரோனா பரவல் காரணமாக PSL எனப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டிகள் பாகிஸ்தானிலிருந்து அபுதாபிக்கு மாற்றப்பட்டன. இந்தத் தொடரின் 19வது லீக் ஆட்டம் ஷேக் சயது மைதானத்தில் சனிக்கிழமையான நேற்று நடைபெற்றது. குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவல் சல்மி அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இதில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரான டுப்ளசிஸ்.

    இந்த ஆட்டத்தின் போது ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஃபாப் டுப்ளசிஸ் பந்து எல்லைக்கோட்டை தொடாமல் தடுப்பதற்காக மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தார். பந்தை பிடிக்கும் முயற்சியின் போது சக அணி வீரரான முகமது ஹஸ்னைனுடன் கடுமையாக மோதிக் கொண்டார். இந்த மோதலில் டுப்ளசிஸுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

    Also Read: இஷாந்த் சர்மா, ஜடேஜாவுக்கு இடமில்லை- மீண்டும் சஞ்சய் மஞ்சுரேக்கர்

    சிறிது நேரம் மைதானத்தில் அமரவைக்கப்பட்ட டுப்ளசிஸ், பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்து பரிசோதிக்கப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் அறிவுரைப்படி அவர் ஓய்வு எடுத்து வந்தார். அவருக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனையடுத்து மீதமூள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியிலிருந்து விலகிய டுபிளெசிஸ் விலகினார்.

    இது தொடர்பாக இணையதளச் செய்தி ஒன்று கூறுவதென்னவெனில், ‘பீல்டிங்கில் காயமடைந்து கன்கஷன் ஏற்பட்ட டுபிளெசிஸ் தொடரிலிருந்து விலகி தென் ஆப்பிரிக்காவுக்குக் கிளம்பிச் செல்கிறார். ’ என்று கூறப்பட்டுள்ளது.

    முன்னர் அவர் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், மெசேஜ் அனுப்பி ஆதரவைக் காட்டிய அனைவருக்கும் எனது நன்றி. தற்போது ஓட்டலுக்கு திரும்பிவிட்டேன், குணமடைந்து வருகிறேன். சிறிதளவு நினைவு இழப்பு ஏற்பட்டுள்ளது/ ஆனால் நான் சரியாகிவிடுவேன். விரைவில் களத்துக்கு திரும்புவேன் என நம்புகிறேன்” என்று கூறினார். ஆனால் இப்போது தாய்நாடு திரும்ப முடிவெடுத்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: