VIDEO | ஃபீல்டிங் பரிதாபங்கள்: டெல்லியின் வெற்றியைப் பறித்த தரமான சம்பவம்!

தவறவிடப்பட்ட ரன் அவுட். (BCCI)

#FafduPlessis, #ShaneWatson Run To The Same End And Still Survive | ஒரு வேளை, தொடக்க ஜோடி விரைவில் பிரிந்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்க வாய்ப்புள்ளது. #CSKvDC

  • News18
  • Last Updated :
  • Share this:
    டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வெற்றியைப் பறித்த தரமான சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் குவாலிஃபையர் 2 போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் சாஹர், ஹர்பஜன் சிங், பிராவோ, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், தாஹிர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.



    அடுத்துக் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் டூ பிளெசிஸ் மற்றும் வாட்சன் ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தினர். அடுத்து வந்த வீரர்கள் ஓரளவுக்கு ரன்களைச் சேர்க்க 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.



    டூ பிளெசிஸ் மற்றும் வாட்சன் ஆகியோர்தான் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வெற்றியை பறித்தவர்கள். இந்த ஜோடியை முதல் ஓவரிலேயே பிரிப்பதற்கு கிடைத்த அற்புதமான ரன் அவுட் வாய்ப்பை டெல்லி வீரர்கள் கோட்டை விட்டனர்.



    ஒரு வேளை, தொடக்க ஜோடி விரைவில் பிரிந்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்க வாய்ப்புள்ளது.

    எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும் - ஹர்பஜன் சிங்!

    டெல்லிக்கு ஒரு நாளும் அடிபணிய மாட்டோம் - சிஎஸ்கே வெற்றி குறித்து பிரபல இயக்குநர் ட்வீட்

    Also Watch...






    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














    விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Murugesan L
    First published: