இலங்கை பவுலிங்கை புரட்டி எடுத்த டுபிளெசிஸ்; 1 ரன்னில் இரட்டைச் சதம் தவறவிட்டார்- வலுவான நிலையில் தெ.ஆ.

டுபிளெசிஸ் அபார இன்னிங்ஸ்.

டுபிளெசிஸ் டெஸ்ட் வாழ்க்கையின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராகும் இது. 199 ரன்களில் லெக் ஸ்பின்னர் ஹசரங்கா பந்தை (4-171) தூக்கி அடிக்க முயன்று கருணரத்னேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

 • Share this:
  சென்சூரியன் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான நேற்று தென் ஆப்பிரிக்க அணி தன் முதல் இன்னிங்சில் 621 ரன்கள் குவித்தது. டுபிளெசிஸ் 199 ரன்கள் விளாசி ஒரு ரன்னில் இரட்டைச் சதம் தவற விட்டார்.

  ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி தன் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்துள்ளது. குசல் பெரேரா 33 ரன்களுடனும், சந்திமால் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். லுங்கி இங்கிடியிடம் கேப்டன் திமுத் கருண ரத்னே (6), குசல் மெண்டிஸ் (0) இருவரும் ஆட்டமிழந்தனர். இலங்கை அணி தன் முதல் இன்னிங்சில் 396 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.

  டுபிளெசிஸ் டெஸ்ட் வாழ்க்கையின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராகும் இது. 199 ரன்களில் லெக் ஸ்பின்னர் ஹசரங்கா பந்தை (4-171) தூக்கி அடிக்க முயன்று கருணரத்னேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 276 பந்துகளைச் சந்தித்த டுபிளெசிஸ் 24 பவுண்டரிகளுடன் 199 ரன்கள் எடுத்தார். பிட்ச் ஏற்ற இறக்கமான பிட்ச், பேட்டிங்குக்கு எளிதல்லாத பிட்சில் மிகப்பெரிய ஒரு இன்னிங்சை டுபிளெசிஸ் ஆடி தென் ஆப்பிரிக்காவை வலுவான நிலைக்கு இட்டுச் சென்றார்.

  ஸ்பின்னர் தனஞ்ஜய டிசில்வா தொடை காரணமாக 2 வாரங்களுக்கு ஆட முடியாமல் நிலை ஏற்பட்டது, மற்ற பவுலர்களும் காயத்தினால் அவதிப்பட்டது தென் ஆப்பிரிக்காவுக்கு சவுகரியமாகப் போய்விட்டது.

  தென் ஆப்பிரிக்கா அணி 317/4 என்று தொடங்கியது. டுபிளெசிஸ், தெம்பா பவுமா (71) இணைந்து 5வது விக்கெட்டுக்காக 179 ரன்களைச் சேர்த்தனர். பவுமா தேவையில்லாமல் நாட் அவுட்டுக்கு வெளியேறினார், களநடுவர் அந்த எட்ஜுக்கு அவுட் கொடுத்தாலும் ரீப்ளேயில் அது எட்ஜ் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது, ரிவியூ செய்யாமல் அவர் வெளியேறியது ஆச்சரியமாக இருந்தது.

  இடது கை ஸ்பின்னர் கேஷவ் மஹராஜ், டுபிளெசிஸ் இணைந்து 7வது விக்கெட்டுக்காக 133 ரன்கள் சேர்த்தனர். கேஷவ் மஹராஜ் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 73 ரன்கள் எடுத்து கடைசியாக ஆட்டமிழந்தார். இலங்கை பவுலிங் படுமோசமாக அமைந்தது, உதிரிகள் வகையில் மொத்தம் 44 ரன்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு வாரி வழங்கினர். 142 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 621 ஆல் அவுட்.

  இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 65/2. இன்னிங்ஸ் தோல்வி தவிர்க்க இன்னும் 160 ரன்கள் தேவை. இலங்கை தரப்பில் விஸ்வா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும் ஸ்பின்னர் ஹசரங்கா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
  Published by:Muthukumar
  First published: