இலங்கை வீரர் ஜெயசூர்யா மரணமடைந்ததாக வெளியான செய்தி அறிந்து ரவிசந்ததிரன் அஸ்வின் மற்றும் பாலிவுட் நடிகர் அர்ஷத் வர்ஷி அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் அந்த செய்தி உண்மை தானா?
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா கனடா சென்ற போது மரணமடைந்ததாக செய்திகள் பரவத் தொடங்கியது. இந்தச் செய்தியைப் பார்த்த ரவிசந்திரன் அஸ்வின் “ஜெயசூர்யா மரணமடைந்துவிட்டாரா? வாட்ஸ்ஆப்பில் வந்த செய்தியை பார்த்து அதிர்ந்துவிட்டேன். ஆனால் ட்விட்டரில் இது சம்மந்தமாக ஒன்றுமே வெளியாகவில்லையே“ என்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.
Is the news on Sanath Jayasuriya true?? I got a news update on what's app but see nothing here on Twitter!!
— Ashwin Ravichandran (@ashwinravi99) May 27, 2019
வாட்ஸ்ஆப்பில் பரவிய செய்தி என்னவென்றால் “கனடா சென்ற ஜெயசூர்யா கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்“ என்பது தான். இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
ஆனால், உண்மையில் ஜெயசூர்யா கனடா செல்லவும் இல்லை, கார் விபத்தில் உயிரிழக்கவும் இல்லை. வதந்தியாக பரவிய இந்தச் செய்தியை ரவிசந்திரன் அஸ்வின் நம்பிவிட்டார். ட்விட்டரில் பலர் அவருக்கு இந்தச் செய்தி வதந்தி என்று தெரிவித்ததையடுத்து அவருக்கு இது புரியவந்துள்ளது.
ஜெயசூர்யாவும் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
Please disregard fake news by malicious websites regarding my health and well being.
I am in Srilanka and have not visited Canada recently.Please avoid sharing fake news.
அதில் “யாரும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம். நான் இலங்கையில் தான் இருக்கிறேன். கனடாவிற்கு செல்லவில்லை. போலியான செய்தியை யாரும் பகிர வேண்டாம்'' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Also Watch
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.