காஷ்மீரில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள மகேந்திர சிங் தோனிக்கு எதிராக காஷ்மீர் மக்கள் கோஷமிடப்பட்டதாக பாகிஸ்தான் மீடியா வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
உலகக் கோப்பை தொடருக்கு பின் தோனி 2 மாதங்கள் ராணுவப் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தோனி தெரிவித்தார். அதன்படி தற்போது அவர் காஷ்மீரில் ராணுவ ரோந்து பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக்கை யூனியன் பிரேதேசங்களாக இந்திய அரசு அறிவித்தது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகி வரும் நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்த்தை பறித்ததற்கு தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
Also Read : காஷ்மீர் விவகாரத்தில் மோதி கொண்ட அஃப்ரிடி, காம்பீர்
இந்நிலையில் மகேந்திர சிங் தோனி காஷ்மீரில் உள்ள பாரமுல்லா பகுதிக்கு சென்ற போது அங்கிருந்த மக்கள் பூம் பூம் அஃப்ரிடி என கோஷமிட்டதாக செய்திகள் பரவ தொடங்கின. பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்ட அந்த வீடியோவை நெட்டிசன்கள் பலர் வைராலாக்கி வந்தனர்.
ஆனால் இந்த வீடியோ பாகிஸ்தான் ஊடகத்தால் 2017ம்ஆண்டு வெளியிடப்பட்டது. 2017ம் ஆண்டு இந்திய ராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீரில் நடத்திய கிரிக்கெட் போட்டிக்கு மகேந்திர சிங் தோனியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். அப்போது ரசிகர்கள் பூம் பூம் அஃப்ரிடி என கோஷமிட்டதாக பாகிஸ்தான் ஊடகம் செய்தி ஒளிபரப்பியது.
Fact Check
காஷ்மீரில் தற்போது நிலவி வரும் குழப்பமான சூழ்நிலையும், தோனி காஷ்மீரில் ராணுவப் பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளதால் இரண்டையும் இணைத்து தற்போது இந்த வீடியோவை சில விஷமிகள் வைரலாக்கி வருகின்றனர். வைரலாகும் வீடியோ தற்போது நடைபெற்றது அல்ல.
Also Read : ஜிம்பாப்வே அணிக்கு பதிலாக களமிறங்கும் புதிய அணி! ஐசிசி அதிரடி
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.