சிக்ஸர்களை பறக்க விட்ட ரசுல்... கொல்கத்தா அணி 178 ரன்கள் குவிப்பு

ரசுல் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி  21 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்களை விளாசி 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

news18
Updated: April 14, 2019, 12:04 PM IST
சிக்ஸர்களை பறக்க விட்ட ரசுல்... கொல்கத்தா அணி 178 ரன்கள் குவிப்பு
ஐபிஎல்
news18
Updated: April 14, 2019, 12:04 PM IST
டெல்லி அணிக்கு 179 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி.

டெல்லி - கொல்கத்தா அணிகள் மோதும் லீக் போட்டி ஈடென் கார்டென் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி அணி.

பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டென்லி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து வெளியேறினர். எனினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கில் நிதானமாக விளையாடி 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.


அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரார் ரசுல் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி  21 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்களை விளாசி 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை எடுத்தது. டெல்லி அணி சார்பில் ரபாடா, கிறிஸ் மோரிஸ், கீமோ பால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், இஷாந்த சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Also watch

Loading...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...