முகப்பு /செய்தி /விளையாட்டு / 'விராட் கோலி ஆட்டம்தான் இன்ஸ்பிரேஷன்' - ரகசியம் சொன்ன உலகக் கோப்பை நாயகி ஜெமிமா!

'விராட் கோலி ஆட்டம்தான் இன்ஸ்பிரேஷன்' - ரகசியம் சொன்ன உலகக் கோப்பை நாயகி ஜெமிமா!

ஜெமிமா ரோட்ரிகஸ்

ஜெமிமா ரோட்ரிகஸ்

மெல்பர்னில் விராட் கோலி விளையாடிய அசாத்திய ஆட்டம் தான் எனக்கு உந்து சக்தியாக இருந்ததாக என உலகக் கோப்பையை வென்ற வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

டி20 மகளிர் உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றி அபார சாதனை படைத்துள்ளது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களத்தில் இறங்கியது.

ஆட்டத்தின் நடுவே இந்திய அணி தடுமாற்றம் கண்டாலும் நான்காவது விக்கெட்டுக்கு அபார பார்ட்னர்ஷிப் கொடுத்த இந்திய வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிகஸ் மற்றும் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு வழிவகுத்தனர். 19 ஓவரின் முடிவில் இந்திய அணி 151 ரன்கள் எடுத்து, ஆட்டத்தில் வெற்றி பெற்றது. ஜெமிமா ரோட்ரிகஸ் 53 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

வெற்றிக் களிப்பில் திளைத்திருக்கும் இந்திய மகளிர் அணியினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், இறுதி ஆட்டதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தனக்கு உந்து சக்தியாக இருந்தது விராட் கோலியின் அபார ஆட்டம் தான் என ஜெமிமா ரோட்ரிகஸ் தெரிவித்துள்ளார்.

இறுதி போட்டி குறித்த அனுபவத்தை பகிர்ந்த அவர், "இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே அது கூடுதல் ஸ்பெஷல் தான். இது குறித்து அணி மீட்டிங்கில் பேசியுள்ளோம். பல முக்கிய ஆட்டங்களை பார்த்து வளர்ந்துள்ளோம். மெல்பர்னில் விராட் கோலி விளையாடிய அசாத்திய ஆட்டம் தான் எனக்கு உந்து சக்தியாக இருந்தது. இது குறித்து நாங்கள் பேசியுள்ளோம். நமது இலக்கு களத்திற்கு சென்று வெற்றியை பெறுவது தான் என்ற பாணியில் விளையாடினோம்" என்றார்.

First published:

Tags: ICC world cup, T20 World Cup, Virat Kohli