ஆட்டத்தின் போக்கையே மாற்றும் இன்னிங்சை எதிர்பார்க்கிறேன்: கவாஸ்கரின் ஆர்வத்தைத் தூண்டும் இந்திய வீரர்

சுனில் கவாஸ்கர்

நாளை, ஜூன் 18ம் தேதி சவுத்தாம்டனில் தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ரிஷப் பந்த் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் இன்னிங்சை ஆடுவார் என்று தனக்கு நம்பிக்கை இருப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    20 டெஸ்ட்களை ஆடுவதற்குள்ளாகவே மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை ரிஷப் பந்த் ஆடி இந்திய அணிக்கு உற்சாகம் ஏற்படுத்தி வருகிறார், சிட்னி சதம், பிரிஸ்பன் வெற்றி இன்னிங்ஸ், இங்கு அகமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிராக அடித்த அதிரடி சதம் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து பவுலர்கள் கண்ணில் வந்து போகத்தானே செய்யும்.

    இந்நிலையில் சுனில் கவாஸ்கர் கூறியதாவது:

    ஆஸ்திரேலியாவில் ரிஷப் பந்த் ஆட்டத்தைப் பார்த்த போது அவர் ஷாட் தேர்விலும் நன்கு தேறியிருப்பதை கவனிக்க முடிந்தது. அவர் அணியில் இருப்பதால் இந்திய அணி கூடுதல் பவுலரை அணியில் சேர்க்க முடிகிறது. இந்த கோடை கால கிரிக்கெட் தொடரில் ரிஷப் பந்த்திடமிருந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றும் இன்னிங்ஸ்களை எதிர்பார்க்கிறேன்.

    ரிஷப் பந்த்


     

    ஒருநாள் கிரிக்கெட்டின் தாக்கத்தினால் சில பேட்ஸ்மென்கள் பந்து எழும்பத் தொடங்கும்போதே நேராகத் தூக்கி அடிக்கின்றனர். இப்படி ஆடும் போது பிட்சில் பந்துகள் ஸ்விங் ஆகாத போது பிரச்னையில்லை, ஆனால் இங்கிலாந்து போன்ற ஸ்விங் ஆகும் சூழ்நிலையில் இந்த ஷாட்டை கவனமாக ஆட வேண்டும். அதாவது பந்துக்கு நெருக்கமாகச் சென்று ஆட வேண்டும்.

    Also Read: ஆஸ்திரேலிய அணியை இந்தியா பந்தாடியதைப் பார்த்து ரசித்தேன்: ராஸ் டெய்லர் புகழாரம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால் விராட் கோலி இப்படிப் பட்ட ஷாட்களை ஆடுவதில்லை, இந்திய ஃபிளாட் பிட்ச்களில் கூட விராட் கோலி ஆன் த ரைஸ் ஷாட்களை ஆடுவதில்லை. இதனால்தான் விராட் கோலி எந்த பிட்சிலும் ஜொலிக்கிறார்.

    இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் சமீபத்தில் நடந்த தொடரில் அவர் சதம் எடுக்கவில்லை, ஆனால் பந்துகள் திரும்பிய சென்னை சுழல் பிட்சில் ஸ்பின் பவுலிங்கை எப்படி ஆடுவது என்பதை பிரமாதமாக ஆடிக்காட்டினார். பந்தை அவரால் முகர முடிகிறது இதுதான் கிரேட் பேட்ஸ்மெனுக்கான பிரதான அடையாளம் ஆகும்.

    இவ்வாறு கூறினார் சுனில் கவாஸ்கர்.
    Published by:Muthukumar
    First published: