• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

பேட்டிங் செய்யும் மிதாலி ராஜ்

பேட்டிங் செய்யும் மிதாலி ராஜ்

மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எட்டி வெற்றிபெற்றது.

  • News18
  • Last Updated :
  • Share this:
20 ஓவர் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. கயானாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் குவித்தது.

134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிரணி களமிறங்கியது.  இந்திய அணியின் மூத்த வீராங்கனையான மிதாலி ராஜ் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதையில் வழி நடத்தினார். மிதாலிராஜ் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் எனினும் 19 ஓவரிலேயே இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எட்டி வெற்றிபெற்றது.

இந்திய அணியின் மூத்த வீராங்கனையான மிதாலி ராஜ் சிறப்பாக விளையாடினார்.


மிதாலிராஜ் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணி ஏற்கெனவே தனது முதல் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணியை 34 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Also see... 2.0 படத்தின் டிரெய்லர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: