ரிஷப் பந்த்துக்கு கொரோனா பாசிட்டிவ் குறித்து கருத்துக் கூறிய கங்குலி, எப்போதும் முகக்கவசம் அணிந்து கொண்டே இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவரிடம் நியூஸ் 18 சார்பில் கேட்கப்பட்டது, அப்போது ‘ரிஷப் பந்த் கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது, இந்திய அணி அங்கு லீவு சுற்றுலா மேற்கொண்ட போது வீரர்கள் மாஸ்க் அணியாமல் சுற்றித்திரிந்தனரே, அவர்கள் இன்னும் கூட எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?’ என்று கேட்கப்பட்டது.
இதற்குப் பதில் அளித்த கங்குலி, “இங்கிலாந்தில் நடந்த யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்து, விம்பிள்டன் என்று அனைத்தையும் பார்த்தோம். விதிகள் மாறியிருந்தன, ரசிகர்கள் இந்தப் போட்டிகளுக்கு வர அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்திய அணி வீரர்கள் விடுப்பில் உள்ளனர், எப்போதும் மாஸ்க் அணிந்து கொண்டேயிருப்பது சாத்தியமில்ல்லை.
Also Read: IND vs ENG | ரிஷப் பந்த் கொரோனாவுக்குப் பிறகு விருத்திமான் சகா, பாரத் அருண் தனிமைப் படுத்தப்பட்டனர்
கேள்வி: ரிஷப் பந்த் கொரோனா பாசிட்டிவ் உறுதி கவலையளிக்கிறதா?
கங்குலி: கவலையில்லை, பாதிக்கப்பட்டவர்கள் நலமடைவார்கள், என்றார்.
மேலும் அந்தப் பேட்டியில், ஷுப்மன் கில் காயமடைந்திருக்கிறார், யார் தொடக்க வீரர் என்று கேட்ட போது, “இந்த விவகாரங்களிலெல்லாம் நான் தலையிடுவதில்லை. அணி நிர்வாகம் இதை முடிவு செய்யும் என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதே போல் நியூசிலாந்துக்கு எதிரான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் தோற்றோம், இங்கிலாந்து தொடர் பற்றி அவரது கணிப்பு என்ன என்று கேட்கப்பட்ட போது, கங்குலி, “எதையும் கணிக்க முடியாது. இந்தியா நிச்சயம் நல்ல கிரிக்கெட்டை ஆடும். ஒரேயொரு ஆட்டத்தின் முடிவை வைத்து சரியான அணியா தவறான அணியா என்பதை முடிவு செய்ய முடியாது.
இது ஒரு நீண்ட தொடர் இரு அணிகளுக்குமே சமன் செய்ய வாய்ப்பிருக்கிறது” என்றார் கங்குலி.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.